Singappenne: ஆனந்தியை வரவழைக்க, கல்யாணத்தை நிறுத்த சுயம்பு போடும் திட்டம்... லலிதா என்டர்
சிங்கப்பெண்ணே டிவி தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்றைய எபிசோடில் நடந்தது என்னன்னு பார்க்கலாமா...
ஆனந்தியின் அக்கா கோகிலாவுக்கு விடிந்தால் கல்யாணம். இப்போது நலங்கு நடக்கிறது. இதில் சுயம்பு சேகருடன் வந்து ஆனந்தி எனக்குத் தான்னு தகராறு பண்ணுகிறான். ஒரு கட்டத்தில் ஆனந்தியின் அப்பா அழகப்பன் உங்கிட்ட என்ன தகுதி இருக்குன்னு கேட்க 18 பட்டிக்கும் தலைவன், தோப்புன்னு எல்லாம் இருக்கு. இதைவிட என்ன தகுதி வேணும்னு சுயம்பு சொல்கிறான்.
எல்லாம் எப்படி சேர்த்ததுன்னு தெரியும் என்கிறாள் ஆனந்தியின் அம்மா. உடனே ஆனந்தி சம்பந்தியின் தம்பி குடும்பத்துக்குத் தான் கட்டிக் கொடுக்கப்போறேன். உன்னால முடிஞ்சதைப் பாருன்னு சொல்லி விடுகிறாள்.
இது என்னடா கூத்து? அன்னைக்கு ஆனந்தி எனக்குத்தான்னு அவளோட அப்பன் வாக்கு கொடுத்தான். இன்னைக்கு அவருக்குன்னு ஆத்தாக்காரி வாக்கு கொடுக்குறா. ஆனந்தியோ அக்கா கல்யாணத்துக்கு முன்னாடி வரை எங்கிட்ட கொஞ்சிப் பேசிக்கிட்டு இருந்தான்னு சொல்கிறான் சுயம்பு.
ஆனந்தி வெகுண்டு எழுந்து உங்கிட்ட எங்கடா கொஞ்சிப் பேசுனேன்னு பொங்குகிறாள். கடைசியில் மகேஷ் சுயம்புவை உதைக்கும் அளவுக்கு சண்டை முற்றி விடுகிறது. டேய் இன்னொரு தடவை இந்த மண்டபத்துக்குள்ள காலை வச்சே... காலை வெட்டிடுவேன்னு மகேஷ் எச்சரிக்கிறான்.
அப்போது சேகர் அவனை காரில் அழைத்துச் செல்கிறான். எவ்வளவு வாங்கினாலும் உரைக்கவே மாட்டேங்குது. இவனெல்லாம் என்ன ஜென்மமோன்னு ஆனந்தியின் அம்மா சொல்கிறாள். அப்போது அழகப்பன் மகேஷ், அன்பு இருவரிடமும் தம்பிகளா மிகப்பெரிய உதவியை செஞ்சீங்க. நீங்க மட்டும் இல்லன்னான்னு பெரிய வார்த்தைகள் எல்லாம் சொல்கிறார்.
சுயம்பு, சேகர், கோட்டைச்சாமி மூவரும் மது அருந்தியபடி கல்யாணத்தை நிறுத்தத் திட்டம் போடுகின்றனர். இந்தக் கல்யாணத்தை நான் நிறுத்துறேன்டா. கோகிலா இன்னைக்கு ராத்திரி வரவேற்புல அங்கே இருப்பாள். ஆனா நாளைக்குக் காலையில அங்கே இருக்க மாட்டாள். என்ன ஆனாலும் சரி. அந்தக் கோகிலா உனக்குத் தான். ஆனந்தி எனக்குத் தான். கோகிலா கழுத்துல நீ தாலி கட்டுற. ஆனந்தி கழுத்துல நான் தாலி கட்டுறேன்னு சேகரிடம் சொல்கிறான் சுயம்பு. அதை சந்தோஷமாகக் கேட்கிறான் சேகர்.
கோகிலாவைக் கடத்தி ஆனந்தியின் அவன் இடத்துக்கு வரவழைக்கத் திட்டம்போடுகிறான். கோகிலாவோ ஆனந்தியிடம் அவள் காதலைப் பற்றி அப்பாவிடம் எடுத்துச் சொல் என்கிறாள். அதே வேளையில் அன்புவின் அம்மா அங்கு என்டர் ஆகிறாள். அடுத்து நடப்பது என்ன என்பதை நாளைய எபிசோடில் காணலாம்.