சிங்கப்பெண்ணே தொடரில் திடீர் திருப்பம்... ஆனந்திக்கு கட்டாய தாலி கட்டிய அன்பு!

சிங்கப்பெண்ணே: ஆனந்தியின் கழுத்தில் தாலி கட்டும் அன்பு என்ற செய்தி தான் இப்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நடந்த எபிசோடில் அன்பு கோகிலாவின் கல்யாணம் முடிந்ததும் ஆனந்தியின் கழுத்தில் தாலியைக் கட்டினானா? வாங்க பார்க்கலாம்.
கல்யாண வீடே களைகட்டி உள்ளது. இந்த சந்தோஷம் இருக்கும்போதே ஆனந்திக்கும் கல்யாணத்தை நடத்தி முடிக்கணும்னு அவளது அம்மா அழகப்பனிடம் சொல்கிறாள். அதைக் கேட்ட அன்பு மனதுக்குள் நீங்க நினைச்சபடியே இந்த சந்தோஷம் எல்லார் மத்தியிலும் இருக்கும்போதே ஆனந்தியின் கழுத்தில் தாலியைக் கட்டத்தான் போறேன்னு சொல்கிறான். அதே நேரம் சுயம்புக்கு ஆனந்தியின் கர்ப்பம் குறித்த விஷயம் தெரிந்ததும் வைத்தியரையும் கத்தி முனையில் கல்யாண மண்டபத்துக்கு அடியாள்களுடன் காரில் வேகமாக வருகிறான்.
இதற்கிடையில் மகேஷ் அவங்க அம்மாவைப் பார்த்து என்ன மாம்... உடம்புக்கு எப்படி இருக்குன்னு கேட்கிறான். அவளோ திட்டம்போட்டுத் தான் வர வைத்துள்ளாள். அதை மறைக்க நேற்று மூச்சுத்திணறலா இருந்தது. ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆகி ட்ரீட்மெண்ட் கொடுத்தாங்க. பரவாயில்லைன்னு சொல்லி சமாளிக்கிறாள். அது மட்டும் அல்லாமல் நீ கல்யாணத்தைப் பார்க்கணும்னு இருந்துருப்ப. நான் வர சொல்லிட்டேன். சாரி மகேஷ்னும் கேட்டுக் கொள்கிறாள். மாம்...பரவாயில்லன்னு சொல்கிறான்.
அதே நேரம் அட்சதை கொடுத்துக் கொண்டு இருக்கிறாள் ஆனந்தி. அன்புவிடம் கொடுக்கும்போது எல்லாருக்கும் நிறைய அட்சதை கொடு. நடக்கப் போறது 2 கல்யாணம். கோகிலா கல்யாணம் முடிஞ்சதும் நமக்கு கல்யாணம்னு சொல்கிறான் அன்பு. விளையாடாதீங்க அன்பு அட்சதையை எடுங்கன்னு ஆனந்தி சொல்கிறாள்.

அதே நேரம் சுயம்பு இதை முதல்லயே சொல்லிருக்க வேண்டியதுதானே வைத்தியரே. இன்னைக்கு அழகப்பனுக்கு ஆப்பு வைக்கிறேன்னு கங்கணம் கட்டிக் கொண்டு காரில் வருகிறான். அதே நேரம் மகேஷ் முகூர்த்த நேரம் முடிஞ்சிடுச்சு. இந்நேரம் அன்பு ஆனந்தியின் கழுத்தில் தாலியைக் கட்டியிருப்பான். எல்லாரும் என்ன சொல்லிருப்பாங்க.
துளசியிடம் போனில் கேட்கலாமா... வேணாம். இதனால பிரச்சனை வந்துடக்கூடாதுன்னு ஃபீல் பண்ணுகிறான் மகேஷ். கல்யாண வீட்டில் கோகிலாவின் கழுத்தில் தாலி ஏறுகிறது. அன்புவும் ஆனந்தியின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். எல்லாரும் ஆச்சரியத்துடன் அதிர்ச்சியில் உறைந்து போய் பார்க்கிறார்கள்.