Singappenne: ஆனந்தியை மருமகளாக்க வந்த லலிதா... அவளை சமாதானப்படுத்த வந்த வார்டன்! ஜெயித்தது யார்?
சிங்கப்பெண்ணே தொடர் சன்டிவியில் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. ஆனந்தி, அன்புவின் காதலை எப்படியாவது அவங்க அப்பா அம்மாவிடம் சொல்லத் துடிக்கிறான் மகேஷ். ஆனால் அன்பு தள்ளிப் போடுகிறான். அதே சமயம் ஆனந்தியை கோகிலாவும் உடனே அப்பா அம்மாவிடம் உன் காதலைச் சொல் என வற்புறுத்துகிறாள்.
எனக்கு உன் கல்யாணம்தான் முக்கியம். என் பிரச்சனையால உன் கல்யாணம் நின்னுடக்கூடாதுன்னு தன் காதலைப் பற்றிச் சொல்ல மறுக்கிறாள். அந்த நேரம் அன்புவின் அம்மாவும், துளசியும் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். அன்புவின் அம்மா தான் வந்த விவரத்தைப் பற்றி அழகப்பனிடம் சொல்கிறாள். அதே நேரம் வார்டனும் அங்கு வருகிறார். இருவரும் சேர்ந்தே பேசலாம்.
இப்ப என்ன அவசரம்னு வார்டன் லலிதாவிடம் சொல்கிறாள். இதற்கிடையில் வாணி தன் கணவன் வேலுவிடம் எனக்கு இந்த கல்யாணத்துக்கு கிளம்ப ஒரு தங்க நகை, வைர நெக்லஸாவது இருக்கான்னு ஆதங்கப்படுகிறாள். கவரிங் நகையாவது வாங்கித் தரேன்னு சொன்னேனே என்கிறாள். ஆனால் அதெல்லாம் எனக்கு செட்டாகாது என்கிறாள் வாணி.
என்னை மன்னிச்சிடுங்க. நீங்க எனக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. நான்தான் ஒண்ணுமே செய்யல அத்தைன்னு அன்புவின் அம்மாவிடம் ஆனந்தி கேட்கிறாள். மாப்பிள்ளையோட சித்தப்பா பையனைக் கல்யாணம் கட்டிக்க ஆனந்தியின் அப்பா சம்மதம்னு மாதிரிதான் சொன்னாங்க என்கிறாள் மித்ரா. ஆனா ஆனந்தியை கேட்டு சொல்றேன்னாருன்னு என வார்டனிடம் சொல்கிறாள் மித்ரா.
எல்லா பிரச்சனையையும் தீர்க்கணும்னு அன்புவை ஆனந்தி ஏத்துக்கிறது ஒண்ணுதான் என்கிறாள் மித்ரா. நானே குழம்பிப் போய் இருக்கேன். இந்தப் பிரச்சனையை யாருக்கிட்டப் போய் பேசுறதுன்னு வார்டன் சொல்கிறாள். அதற்கு எனக்கு குழப்பம் எதுவுமே இல்ல மேடன்னு ஆனந்தி சொல்கிறாள். அடுத்து நடப்பது என்னன்னு நாளைய எபிசோடில் பார்க்கலாம்.