Singappenne: கோகிலாவின் கல்யாணம் முடிகிறதுக்குள்ள இத்தனை களேபரமா... ஆனந்தி எப்படித்தான் சமாளிப்பாளோ?
சிங்கப்பெண்ணே டிவி தொடரில் இன்று என்ன நடந்ததுன்னு பார்க்கலாமா...
அன்பு அம்மா பொண்ணைக் கொடுங்கன்னு கேட்டுறக்கூடாது. அது கல்யாணத்துக்கு ரொம்ப சிக்கலைக் கொண்டு போய் விட்டுரும். ஏற்கனவே சுயம்புவால நிறைய பிரச்சனையை சந்திச்சாச்சு. இனி இதுவும் வந்துரக்கூடாது.
அவங்களை இந்தக் கல்யாணம் முடிகிற வரைக்கும் தடுத்து நிறுத்துங்க. அது போதும் மேடம்னு வார்டனிடம் ஆனந்தி கேட்கிறாள். அப்படின்னா கல்யாணம் முடிந்ததும் அவங்க கேட்டா என்ன செய்வேன்னு கேட்குறாங்க. அதுக்கு நான் எப்படியாவது முற்றுப்புள்ளி வச்சிருவேன்னு ஆனந்தி சொல்கிறாள்.
அன்புவோட சேர முடியாம, விடவும் முடியாம நரக வேதனையை அனுபவிச்சிக்கிட்டு இருக்கா. கடவுள்தான் அவளுக்கு நல்ல வழியைக் காட்டணும்னு வார்டன் சொல்கிறார். அதே நேரம் ரிசப்ஷன் களைகட்டுது. அங்கு மாப்பிள்ளை வீட்டாரில் ஒருவரான ஷோபாவின் வைரநெக்லஸ் திருடு போகிறது. திருடியவர் வேறு யாருமல்ல. வாணி தான். அவளுக்குத் தான் நகை ஒன்றுமே இப்போது தன்னிடம் இல்லையே என்று அதன்மீது ஆசை வந்துவிட்டது.
அதே நேரம் ரிசப்ஷன் களைகட்டுகிறது. ஒரே ஆட்டம் பாட்டம்தான். மகேஷ், துளசி ஆடியதும், ஆனந்தியும், அன்புவும் ஜோடியாக ஆடுகிறார்கள். இதைப் பார்க்க முடியாமல் இருவரும் அங்கிருந்து சென்று விடுகின்றனர். மகேஷ் அழுகிறான். நீங்க நல்ல நடிகர் சார்னு துளசி சொல்கிறாள். எப்படி உங்களால காதலை விட்டுக் கொடுத்துட்டு 3வது மனுஷன் மாதிரி நிக்க முடியுதுன்னு கேட்கிறாள் துளசி. நீயும் எவ்வளவோ ஆசைப்பட்டுருப்பே.
அன்புவுடன் சேர்ந்து வாழணும்னு. அது நடக்கலன்னதும் தெரிந்ததும் நீயும் தான விட்டுக் கொடுத்துருக்க. அப்படிப் பார்க்கும்போது நமக்குப் பிடிச்சவங்க அவங்களுக்குப் பிடிச்சவங்க கூட சேரணும். அப்படி சேர்த்து வைக்கிறதும்கூட சந்தோஷமான விஷயம்தான். ஆனா அவங்க சேரும் வரைக்கும் நமக்கு அந்த வலி இருக்கும் என்கிறான் மகேஷ்.
அப்போது நாளைக்கு யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்யாணம் நடக்கும்போது அன்பு மாமா, ஆனந்தி கழுத்துல தாலி கட்டுவாரு என்கிறாள் துளசி. அதைக் கேட்டு மகேஷ் அதிர்ச்சி அடைகிறான். இது சரியா இருக்குமான்னு மகேஷ் கேட்கிறான். ஆனந்தி அப்பா அம்மாகிட்ட பேசுற சூழல் அமையலன்னா என்ன செய்றது? இது குருட்டுத்தனமான யோசனை தான்.
ஆனா இதுதான் சரியான முடிவு என்கிறாள் துளசி. நீங்க எடுத்த முடிவு கரெக்டானதுன்னு சொல்ல முடியல. ஆனா எங்கிட்ட இதைவிட பெட்டரான ஐடியாவும் இல்லை என்கிறான் மகேஷ். அதே நேரம் ஆனந்தியின் அப்பாவிடம் அன்புவின் அம்மா பேசப் போகிறாள்.
ஷோபா மாடியில் இருந்து நிறுத்துங்க என் நகையைக் காணோம்னு ஆடிக் கொண்டு இருந்த கூட்டத்தைப் பார்த்து கத்துகிறாள். ஆனந்தி அதிர்ச்சியுடன் மேலே பார்க்கிறாள். அடுத்து என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.