Vijay Tv: முத்துவுக்கு நடக்கும் பெரிய ஆபத்து… தங்கமயிலின் படிப்பு ரகசியம் அறிந்த சரவணன்..
Vijay Tv: விஜய் தொலைக்காட்சியில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் எபிசோடுகளில் நடக்க இருக்கும் சம்பவம் குறித்த வார புரோமோ வெளியாகி இருக்கிறது.
சிறகடிக்க ஆசை தொடரில் கதிரை பிடித்துக் கொடுக்கும் மனோஜ் மற்றும் ரோகிணிக்கும் மிகப்பெரிய உதவி செய்திருக்கிறார். இருந்தும் அவரின் உறவுக்கு பெரிய வேட்டு வைக்கும் விதமாக சிட்டியிடம் கார் சாவி எடுக்க ரோகிணி உதவி இருக்கிறார்.
அதை வைத்து முத்துவின் கார் பிரேக் வயரை கட் செய்து இருக்கும் சிட்டி அவருக்கு ஆபத்தை ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தெருவில் சென்று கொண்டிருக்கும் முத்து பிரேக் போட முயல அது நிற்காமல் தாறுமாறாக சென்று கொண்டிருக்கிறது.
வண்டியை எப்படி நிறுத்தலாம் என பெரிய போராட்டத்திற்கு பின்னர் பிள்ளைகள் வரும் ஆட்டோவில் இடிக்காமல் இருக்க வண்டியை முத்து திருப்புகிறார். அது கான்ஸ்டபிள் அருணின் பைக்கை இடித்து தள்ளிவிட காரை முத்து நிறுத்தி விடுகிறார்.
இதனால் முத்து மற்றும் அருண் இருவருக்கும் சண்டை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரில் தங்கமயில் கல்வி சான்றிதழை வாங்க அவர் படித்ததாக சொன்ன கல்லூரிக்கு அவரை அழைத்து செல்கிறார் சரவணன்.
ஏற்கனவே அவரிடம் விஷயத்தை சொல்ல பெரிய போராட்டத்துடன் இருக்கும் மயில் இனிமேல் தாமதித்தால் பெரிய பிரச்சினையாகும் என நினைத்து தான் படிக்கவே இல்லை தான் 12-வது மட்டுமே படித்திருப்பதாக உண்மையை சொல்லி விடுகிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடையும் சரவணன் உன்னை ஹோட்டலில் பார்த்தப்ப நம்ம உறவுல விரிசல் விழுந்துச்சு. இப்போ இந்த பொய்யை கேட்டதும் மொத்தமா நமக்குள்ள உள்ள எல்லா விஷயமும் முடிஞ்சு போச்சு என சொல்லிவிட்டு அங்கிருந்து செல்கிறார்.