Siragadikka Aasai: முத்துவுக்கு வந்த ஆபத்து… அருணால் வந்த புது சிக்கல்!..

By :  AKHILAN
Update: 2025-05-12 05:20 GMT

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் நடக்க இருக்கும் எபிசோட்டின் தொகுப்புகள்.

முத்துவின் காரில் முட்டையை கொட்டி விட முத்து மற்றும் மீனா இருவரும் க்ளீன் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனாலும் நாத்தம் வருவதால் காரை என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருக்க ரவி ஸ்ப்ரே எடுத்து வருகிறேன் என்கிறார்.

கார் சாவியை வாங்கி வண்டி முழுவதும் ஸ்ப்ரே அடித்து விடுகிறார். சிட்டி தன்னுடைய ஆட்களுக்கு கால் செய்து முத்து என்ன செய்கிறான் எனக் கேட்க காரில் முட்டை கொட்டி விட்டதால் அதை க்ளீன் செய்து கொண்டு இருக்கின்றனர்.

மறுபக்கம் மீனாவிடம் முத்து கார் சாவியை கேட்க என்னிடம் இல்லை என்கிறார். இருவரும் மாற்றி மாற்றி தேடிக்கொண்டு இருக்க முத்து உன்னிடம் தான் கொடுத்தேன் என்கிறார். ஆனால் மீனா நான் எதையும் மறக்க மாட்டேன். நேத்து என்ன சட்ட போட்டு இருந்தீங்க எனக் கூட தெரியும்.

அண்ணாமலை என்னாச்சி எனக் கேட்க சாவியை தேடிக்கொண்டு இருப்பதாக முத்து சொல்கிறார். மீனா, என்னிடம் கொடுத்ததாக சொல்லிவிட்டதாக சொல்ல என்ன நடந்துச்சுனு யோசி என்கிறார். முட்டை விழுந்ததை க்ளீன் செஞ்சேன். ரவி வந்தான் ஸ்ப்ரே அடிச்சான் என யோசிக்கிறார்.

பின்னர் ரவிக்கு கால் செய்து அவர் மறந்து போய் சாவியை எடுத்து சென்றதாக சொல்கிறார். முத்து கார் சாவியை வாங்கிக்கொண்டு ஸ்டார்ட் செய்து கொண்டு இருக்கிறார். என்னாச்சுங்க எனக் கேட்க பேட்டரியில் பிரச்னை இருப்பதாக சொல்லி காரை ஸ்டார்ட் செய்கிறார். 

 

முத்து காரில் சென்று கொண்டிருக்க திடீரென அவருடைய பிரேக் பிடிக்காமல் தடுமாறுகிறது. என்ன செய்வது என தெரியாமல் வண்டியை தாறுமாறாக ஓட்டிக் கொண்டிருக்கிறார் முத்து. ஒரு கட்டத்தில் பள்ளி குழந்தைகளின் ஆட்டோ வர அவர்கள் மீது மோதாமல் இருக்க காரை திருப்பி ஒரு பைக்கின் மீது மோதி விடுகிறார்.

அப்பாடா என யோசிக்க அந்த பைக் கான்ஸ்டபிள் அருணுடையது என்பதால் அவர் கோபமாக அங்கு வருகிறார். அவர் கோபமாக வந்து முத்துவை அரெஸ்ட் செய்யப் போவதாக சொல்லி இழுக்க கார் பிரேக் பிடிக்கலை என்கிறார். ஆனால் அருண் நம்பாமல் இருக்கிறார்.

என்ன மோதுற மாதிரி தான் வந்த ஆனால் நான் நகர்ந்து விட்டேன் என்கிறார். உடனே முத்து தன்னுடைய காரில் பிரேக் இல்லை எனச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். இருந்தும் அவர் நம்பாமல் அவரை அழைத்து செல்வதை ஸ்ருதியின் அம்மா வீடியோ எடுக்கிறார்.

Tags:    

Similar News