Siragadikka aasai: அம்மா என உளறிய கிரிஷ்… அடுத்த சம்பவத்திற்கு தயாராகிறாரா ரோகிணி?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட்களுக்கான புரோமோ குறித்த தொகுப்புகள்.
ரோகிணியை காவல்துறை அரெஸ்ட் செய்து கடந்த வார இறுதியில் அழைத்து சென்று இருக்கின்றனர். போலீஸாரிடம் ரோகிணி அழுது கேட்டு கொண்டு இருக்க மீனா, முத்துவிடம் ஏங்க ரோகிணியை பாத்தா பாவமா இருக்கு என்கிறார்.
முத்து அப்போ நான் அரெஸ்ட் செஞ்சி போனப்ப பார்லர் அம்மா அமைதியா இருந்துச்சு என்கிறார். பின்னர் மீனா அமைதியாக பேசி ரோகிணியை அழைத்து வர முடிவெடுத்து இருக்கிறார். இதனால் ரோகிணியை இந்த வார எபிசோட்டில் ரிலீஸ் செய்து விடுவார்கள் என தெரிகிறது.
கிரிஷ் சாமியிடம் கை கூப்பி ரோகிணிக்காக வேண்டிக்கொள்கிறான். அம்மாவை வெளியில் அழைச்சிட்டு வரணும் எனக் கேட்டு கொண்டு இருக்கிறான். அப்போ அண்ணாமலை, ரவி அங்கு வந்து என்ன என்று கேட்க கண்ணீர் வந்தா கடவுள்கிட்ட போகணும்னு பாட்டி சொல்லி இருக்காங்க என்கிறார்.

ரவி அப்படி உனக்கு என்ன கண்ணீர் எனக் கேட்க அம்மாவை அரெஸ்ட் எனத் தொடங்கி இல்ல இல்ல ரோகிணி ஆண்ட்டியை அரெஸ்ட் செஞ்சி அழைச்சிட்டு போய் இருக்காங்க. அவங்க சீக்கிரம் அழைச்சிட்டு வரணும் என வேண்டிக்கொள்வதாக சொல்கிறார்.
ரவி மற்றும் அண்ணாமலை யோசித்து கொண்டு இருக்க வீட்டிற்கு ரோகிணியை அழைத்து கொண்டு வருகின்றனர். கிரிஷ் ஆண்ட்டி என அழைக்க எல்லாரும் அமைதியாக இருக்கின்றனர். தற்போது ரோகிணி மீண்டு வருவதால் விஜயா கண்டிப்பா கடுப்பாகி விடுவார் எனத் தெரிகிறது.