Siragadikka Aasai: முத்து, மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோகிணி... அசிங்கப்பட்ட அருண்!... நல்லா இருக்குல!

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.
மீனா இப்போ ரோகிணி ஜெயிலுக்குள் போனா மாமா மரியாதை தான் போகும் என முத்துவை பேசி சமாதானம் செய்கிறார். உடனே முத்து ஆமா நீ சொல்றதும் எனக் கூறி இன்ஸ்பெக்டரில் ரோகிணிக்காக முத்து பேசுகிறார்.
சார் இப்போ இவங்களை அரெஸ்ட் செஞ்சா எங்க குடும்ப பேருதான் கெட்டு போகும் என்கிறார். அவங்க தானே சொல்லி இருக்காங்க. இவங்க மேல மட்டும் கேஸ் போட்டு கோர்ட்ல நிறுத்துனா ரோகிணி பேரை சொன்னாங்க எங்களுக்கு தான் பிரச்சனை என்கிறார்.
இருந்தும் முத்து கெஞ்ச அதன் பிறகே மனோஜ் ப்ளீஸ் சார் எனக் கேட்கிறார். சரி நீங்க கஷ்டப்படுத்துனவனங்களே உங்களுக்காக பேசுறாங்க. இனிமே இப்படி செய்யாதீங்க எனக் கூற செய்ய மாட்டேன் என்கிறார் ரோகிணி. சரி கையெழுத்து போட்டு விட்டு போங்க எனக் கூறுகிறார்.

உங்களால இந்த பொண்ணு எவ்வளோ அலைஞ்சிது. அதுக்கிட்ட மன்னிப்பு கேளுங்க என்றும் கூற மீனாவிடம் மன்னிப்பு கேட்கிறார் ரோகிணி. ரோகிணி கையெழுத்து போட்டுவிட்டு கிளம்ப எங்க போறீங்க எனக் கேட்கிறார். அதான் கேஸ் இல்லையே சார் என முத்து கேட்க இருக்கலாம்.
ஆனா உயிருக்கு போராடிக்கிட்டு இருக்க அந்த ஆள் நிலைமை தெரியிற வரை நீங்க இங்கதான் இருக்கணும் என்கிறார். வெளியில் வரும் மீனாவிடம் அருண் நல்லவிதமாக பேசி விளக்க கடிதம் எழுதி கொடுத்தா விட்ருவாங்க எனக் கூற பின்னால் இருந்து தப்பே பண்ணாம நான் ஏன் எழுதி தரணும் என்கிறார்.
விட்டாங்களா என அருண் அதிர்ச்சியில் கேட்க அவர் மேல தப்பு இல்லனு நிரூபிச்சாச்சு என்கிறார். வீட்டில் விஜயா கவலையே இல்லாமல் சாப்பிட்டு கொண்டு இருக்கிறார். அண்ணாமலை கிரிஷை கேட்க எனக்கு தெரியாது. அவன் எங்க வேணா போகட்டும் என்கிறார்.
ரவியை அழைத்து தேடச்சொல்ல அவரும் வீடு முழுவதும் தேடிவிட்டு கிரிஷை காணும் என்கிறார். உடனே அண்ணாமலை மற்றும் ரவி பைக்கில் கிரிஷை தேடி அலைகின்றனர். அப்போ கோயிலில் அவர் ரோகிணியை வெளியில் அழைத்து வரக்கூறி வேண்டிக்கொண்டு இருக்கிறார்.
அதை பார்க்கும் ரவி மற்றும் அண்ணாமலை இங்க எதுக்கு இருக்க எனக் கேட்கிறார். அது அம்மாவா? என இழுத்து பின்னர் இல்ல ரோகிணி ஆண்ட்டியை போலீஸ் பிடிச்சிட்டு போய்ட்டாங்கள அவங்க வெளியில் வரணும் என வேண்டிக்க வந்ததாக சொல்கிறார்.
அண்ணாமலை இதான் சின்ன பிள்ளை மனசு எனக் கூறி கிரிஷை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். முத்து மற்றும் மீனா வீட்டிற்கு வந்து ரோகிணிக்கு நடந்ததை சொல்கின்றனர். அண்ணாமலை முத்துவை மெச்சி கொள்கிறார்.
அப்போ ரோகிணி வர விஜயா அவரை என்ன ஏமாத்த பாத்த அதான் உனக்கு கர்மா என்கிறார். உடனே ஸ்ருதி அப்போ அந்த ஆளுங்க வந்து மிரட்டுனது உங்களுக்கு கர்மாவா என பதிலடி கொடுக்கிறார். பின்னர் முத்து இது எல்லாத்துக்குமே அம்மாதான் ஆரம்ப புள்ளி என்கிறார் முத்து. இதில் விஜயா கடுப்பாகிறார்.