Siragadikka Aasai: முத்து எடுத்த முடிவால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் மீனா! தேவையா அம்மணி இதெல்லாம்?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
முத்து தன்னுடைய காரில் சீதாவின் கல்யாணம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறார். நம்ம பிரச்சனையை பத்தி மட்டும் தான் யோசிச்சோம். சீதாவை பத்தி யோசிக்கவே இல்லை. மீனா எவ்வளவோ சொன்னா நான் தான் முரட்டுத்தனமாக நடந்து கொண்டேன்.
முதல்ல சீதா விரும்பின பையனையே அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். இதை மீனாவிடம் சொல்லுவோம். இல்ல வேணாம் நேரா அத்தை கிட்டே போய் இதை சொல்லிடலாம் என முடிவெடுக்கிறார் முத்து. வீட்டில் மீனா சோகமாக இருக்க அதை அண்ணாமலை கவனிக்கிறார்.
மீனா என்ன உன்னுடைய முகம் இரண்டு நாளா சரியாக இல்லை. சீதா உடைய கல்யாணம் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறாயா?. முத்து பிடிவாத காரன் தான். ஆனா சொன்னா புரிஞ்சுப்பான். நான் அவனிடம் பேசுகிறேன் என்கிறார். உடனே விஜயா அவர்களை ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்க சொல்லுங்க என்கிறார்.
ஆனால் அண்ணாமலை மீனாவும், சீதாவும் ரொம்ப மரியாதை தெரிஞ்ச பொண்ணுங்க. அவங்க என்னைக்குமே இப்படி பண்ணமாட்டாங்க. இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என விஜயா கடுப்பாக அந்த நேரத்தில் ஸ்ருதி வருகிறார்.
நம்ம வீட்லயும் ரவியும், ஸ்ருதியும் இப்படித்தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவ தானே கல்யாணம் பண்ணி வச்சா. அப்ப நம்ம குடும்பத்தை பத்தி நெனச்சு பாக்கலையே என்கிறார். உடனே ஸ்ருதி எங்க அப்பா அம்மா ஒத்துக்கிட்டா நான் ஏன் இப்படி கல்யாணம் பண்ணிக்க போறேன் என்கிறார்.
அவர் மீனாவிடம் பேசாம ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டு முத்து சம்மதிச்சதற்கு அப்புறம் எல்லாருக்கும் சொல்லி கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தானே என்கிறார். ஆனால் அண்ணாமலை அதெல்லாம் தப்பும்மா. குடும்பத்துக்கே செய்ற துரோகம். மீனா என்னைக்கும் அதுக்கு ஒத்துக்க மாட்டா என்கிறார்.
இதைக் கேட்டு மீனா கண்கலங்கி விடுகிறார். கிச்சனுக்கு சென்று அவசரப்பட்டு கல்யாணம் பண்ணி வச்சி இப்போ குற்ற உணர்ச்சியில் தவிச்சு கொண்டு இருக்கேனே என வருத்தப்படுகிறார். சீதா வீட்டிற்கு வரும் முத்து ஒரு புடவையை கொடுத்து நாளைக்கு பொண்ணு பார்க்க வராங்க என்கிறார்.
இதை கேட்ட சீதாவின் முகம் மாறுகிறது. சத்யா மாப்பிள்ளை எந்த ஊரு எனக் கேட்க இந்த ஊரு தான் என்கிறார். அதுவும் சீதா கேட்ட மாதிரி கவர்மெண்ட் மாப்பிள்ளை. மீனாவின் அம்மா எப்போ வர சொல்லி இருக்கீங்க எனக் கேட்க சீதா தான் சொல்லணும் என்கிறார். சீதா அதிர்ந்து பார்க்க நாளைக்கு அருணை பொண்ணு பார்க்க வரச்சொல்லு என்கிறார்.
சீதா ரொம்ப அறிவாளியான பொண்ணு. அருண் எப்படி இருந்தாலும் அவனை சமாளிச்சு சரி பண்ணிடுவா என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. எல்லாத்துக்கும் பயந்துகிட்டு இருக்க முடியாது என்கிறார். மீனாவின் அம்மா உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை கிடைச்சிருக்கு நாங்க கொடுத்து வச்சிருக்கணும் என சந்தோஷப்பட்டு பேசுகிறார்.
முத்து ஒப்புக்கொண்ட விஷயத்தை மீனாவின் அம்மா கால் செய்து மீனாவிற்கு கூறி சந்தோஷப்படுகிறார். இதைக் கேட்கும் மீனாவும் சந்தோஷத்தில் வீட்டில் இருப்பவர்களிடம் இதை சொல்கிறார். அண்ணாமலையும் கேட்டு சந்தோஷப்படுகிறார்.