Siragadikka Aasai: முத்துவிற்கு எதிராக பிரச்னையை தொடங்கிய அருண்… விஜயாவிற்காக ஏங்கும் மீனா…

By :  AKHILAN
Published On 2025-07-18 10:09 IST   |   Updated On 2025-07-18 10:09:00 IST

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோட் குறித்த தொகுப்புகள்.

அருண் வீட்டிற்கு இருந்தும் கிளம்பும் போது மீனா சத்யாவை அழைத்து உனக்காக மாமா ஒரு வேலை ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக சொல்கிறார். அருண் இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு நீ ஒரு வேலைக்கெல்லாம் போக கூடாது.

நீ என்ன ஆக இருக்கிறீயோ அதுக்கேத்த மாதிரி ஒரு வேலைல போகணும் என்கிறார். உடனே சத்யா தனக்கு ஸ்டார்ட் அப் தொடங்க வேண்டும் என்று ஆசை என்கிறார். அதனால் நான் ஒரு பைனான்ஷியரிடம் சொல்கிறேன். அங்கு வேலைக்கு போறீயா எனக் கேட்கிறார்.

சத்யாவும் சரியென கூற சிந்தாமணி கணவர் பைனான்ஷியரிடம் சத்யா வேலைக்கு அருண் பேச அவரும் ஒப்புக்கொள்கிறார். சத்யாவிடம் இதை சொல்ல மீனா அம்மா சந்தோஷப்படுகின்றனர். பின்னர் அருண் குடும்பம் மீனா குடும்பத்தினருக்கு டிரெஸ் வைத்து கொடுக்கிறார்.

அதை மீனா அம்மா சந்தோஷப்பட விஜயா தன் குடும்பத்தை அசிங்கப்படுத்தியை நினைத்து பார்க்கிறார். பின்னர் முத்துவுக்கும் டிரெஸ் வைத்து கொடுக்க முதலில் மறுக்கும் மீனா வாங்கிக்கொள்கிறார். ரோகிணி நீத்துவை பார்க்க ரெஸ்டாரெண்ட்டுக்கு வந்திருக்கிறார். 

 

ரவியை பார்க்க வந்தீங்களா எனக் கேட்க நீத்து அவரை அழைக்க செல்கிறார். ரவி வர என்ன விஷயம் எனக் கேட்க நான் நீத்துவை பார்க்க வந்தேன். ஒரு கிளையண்ட் வீட்டில் பங்ஷன் அதற்கான அமெளண்ட் குறித்து பேச வந்தாக சொல்லி சமாளிக்கிறார். அப்போ நீத்து, ரவியுடன் தொட்டு பேசுவதை ரோகிணி தவறாக ஜட்ஜ் செய்து கொள்கிறார்.

ரோகிணி விஷயத்தை போட்டு வாங்க உங்களுக்கு ரவி ஹெல்ப்பா இருக்காரா எனக் கேட்க நீத்து தன்னுடன் ரவி இருப்பதால் தான் ஈசியாக இருப்பதாக சொல்கிறார். பின்னர் ரோகிணி கல்யாணம் குறித்து கேட்க பிஸினஸில் ரவி பார்டனராக இருப்பது போல வாழ்க்கையிலும் ஒருத்தர் இருக்கணும் என்கிறார்.

அதெப்படி எனக் கேட்க ரவி மாதிரி ஹெல்ப்புல்லா இருக்கணும். கேரிங்கா இருக்கணும் என ரவி மாதிரி எனச் சொல்ல இதை ரோகிணி கூர்மையாக கவனித்து கொண்டு இருக்கிறார். பின்னர் வெளியில் வந்து ஸ்ருதியின் அம்மாவுக்கு கால் செய்து நீத்து எதோ ரவி மீது ஒரு ஐடியாவில் இருப்பதாக சொல்கிறார்.

ரவி பெயரை சொல்லிக்கிட்டே இருக்கா? தொட்டு தொட்டு பேசிக்கிட்டே இருக்கா எனவும் சொல்லிவிடுகிறார். ரவி சரியாக இருக்காங்க. ஆனா நீத்து அப்படி இல்லை என்கிறார். நீங்க ஸ்ருதியை கொஞ்சம் கேர்புல்லா இருக்க சொல்லுங்க எனவும் போட்டு விடுகிறார்.

பின்னர் மீனா வீட்டில் முத்துவிடம் சீதா வீட்டில் நடந்த விஷயத்தை சொல்லிக்கொண்டு இருக்கிறார். புரியுது மீனா உங்க அம்மாக்கு அந்த மரியாதை இங்க கிடைச்சது இல்ல. நீ அடுத்த ஜென்மத்துல நல்ல மாமியார் பாசமும், எனக்கு அம்மா பாசமும் கிடைக்கணும் என கண்ணீர் விடுகிறார்.

அடுத்த நாள் விஜயா, மீனாவை வம்பு இழுக்கிறார். காபி போட்டியா எனக் கேட்க நான் எடுத்துட்டு வரேன் என்கிறார். காபி வேண்டாம். டீ போடு எனக் கூற மீனா சரி என்கிறார். முத்து அதை எடுத்துட்டு வா எனக் கேட்க விஜயாவிடம் இதையே குடிங்க என்கிறார்.

என் விருப்பத்துக்கு குடிக்க முடியாதா எனக் கேட்க முடியும். ஆனா முன்னாடியே சொல்லணும் என்கிறார். இது பழி வாங்குற மாதிரி இருக்கு என்கிறார். அவ வேலைக்காரி இல்ல இந்த வீட்டோட மருமகள் என்கிறார்.

Tags:    

Similar News