Siragadikka Aasai: சீதா கல்யாணத்துக்கு ஸ்ருதி செய்ய போகும் விஷயம்… பொறாமையில் பொங்கும் ரோகிணி!
Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொடராக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடு குறித்த தொகுப்புகள்.
சீதா கல்யாண ஏற்பாடு தொடங்கி இருக்கிறது. ஸ்ருதி தன்னுடைய ரூமில் இருந்து ரெஸ்டாரண்ட் குறித்த வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் ரவி நீ சும்மாவே இருக்க மாட்டியா இதையே எத்தனை நாளா பார்த்துகிட்டு இருப்ப என கேட்கிறார்.
நீ காலம் ஃபுல்லா சம்பளம் வாங்கியே காலத்தை ஓட்ட போறியா. அதுக்கான ஒரு நேரம் வரும். அப்போ இதை செய்யலாம் என்கிறார். உடனே ஸ்ருதி நான் கொஞ்ச நாளா இதை ஸ்டாப் பண்ணி வைக்கலாம்னு முடிவு எடுத்து இருக்கேன் என்கிறார். ரவி ரொம்ப சந்தோஷம் எனக் கூற, நீ சந்தோஷப்படாத சீதா கல்யாணம் வரையும் தான் என்கிறார்.
ஆமாம் நானும் சொல்லணும்னு நினைச்சேன். கேட்டரிங் யாரையும் ஏற்பாடு செஞ்சிட போறான் என்கிறார். ஸ்ருதி இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன் எனக் கூற, நீ என்ன சொல்றது நான் போய் முத்து கிட்ட சொல்ல போறேன் என ரவி சென்று விடுகிறார்.
அண்ணாமலை தன்னிடம் இருந்த 52 ஆயிரம் பணத்தை எடுத்து முத்துவிடம் கொடுக்கிறார். இப்போ எதுக்கு இவ்ளோ பெரிய அமௌன்ட் கொடுக்குறீங்க என விஜயா கேட்க உன் காசுல கொடுக்கலையே. இது என் காசு. மத்த செலவை எல்லாரும் பாத்துக்கிறாங்க. இது சும்மா தானே இருக்கு என்கிறார்.
நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் என அண்ணாமலை கூற அப்போது வரும் ரவி ஆமா நானும் அத சொல்ல தான் வந்தேன். கேட்டரிங் வேலையை நான் பார்த்துகிறேன் என கூறுகிறார். உடனே பின்னால் வரும் ஸ்ருதி இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன் என கூறுகிறார்.
இதைக் கேட்ட விஜயா சந்தோஷப்பட்டு நீதானம்மா என் மருமக என பெருமை பாராட்டுகிறார். உடனே ஸ்ருதி நான் அப்படி சொல்லலை. அதை மட்டும் செய்ய மாட்டேன். 3 பவுனில் நகை போடணும் என்கிறார். இதை கேட்டு விஜயா கடுப்பாகிறார்.
ரோகிணி எனக்கு கடன் கேட்டதுக்கு காசு இல்லைனு சொன்னா இப்போ பாரு என மனோஜிடம் கிசுகிசுக்கிறார். மனோஜ் நீ என்ன செய்ய போற எனக் கேட்க ஷோரூம் போறேன் என்கிறார். கல்யாணத்துக்கு எனக் கேட்க நான் எதுக்கு செய்யணும். நீ கிரைண்டர், மிக்ஸி கொடுத்துற என்கிறார்.
ரோகிணி நான் ப்ரீயா மேக்கப் போட்டு விடுறேன் எனக் கூற வேண்டாம். சீதாக்கு பிடிக்காது என மீனா மறுக்க முத்து அதெல்லாம் போட்டுக்குவா என்கிறார். பின்னர் ஸ்ருதியிடம் ரோகிணி எனக்கு எமெர்ஜென்சிக்கு கேட்டப்ப நீங்க கொடுக்கலை.
ஆனால் இப்போ நகை போட மட்டும் காசு இருக்கா. அப்போ நானும் மீனாவும் வேறனு தானே நினைச்சிருக்கீங்க என்கிறார். உடனே ஸ்ருதி நீங்க அவசரத்துக்கு பணம் கேட்கல ஆன்ட்டிக்கு கொடுப்பதற்காக கேட்டீர்கள். மீனா \ஒன்னும் உங்க கிட்ட கேட்கலையே என்ன ரோகிணி கூற அவங்க என்னைக்குமே அப்படி கேட்க மாட்டாங்க என மூக்கு உடைத்து செல்கிறார் ஸ்ருதி.
மீனா வந்து ஸ்ருதியிடம் ஏன் இவ்வளவோ ரொம்ப அதிகமா இருக்குங்க எனக் கூற அதெல்லாம் இல்ல. எனக்கு சீதா சிஸ்டர் மாதிரி தான் என்கிறார். சரி நாளைக்கு கடைக்கு போகலாம் என பிளான் போடுகின்றனர். ரோகிணிக்கு பிஏ கால் செய்து மிரட்டுகிறார்.
நீ நாளைக்குள்ள எனக்கு முடிவை சொல்லலை என்றால் நான் முத்துவிடம் சொல்லிவிடுவேன் என்கிறார். ரோகிணி பதட்டத்தில் இருக்கிறார். நைட் தூங்கி கொண்டு இருந்தவருக்கு இது நியாபகமாக வர எழுந்து அமர்கிறார். பின்னர் இதே டயலாக் வர உன்னை சும்மா விடமாட்டேன் எனக் கத்துகிறார்.
ஆனால் அந்த சத்தத்தில் மனோஜ் எழுந்து இருக்க ரோகிணி படுத்துக்கொண்டு விடுகிறார். எழுப்பி கேட்க இல்லையே என சமாளிக்கிறார். தொடர்ந்து வெளியில் குடும்பமே என்ன இந்த சத்தம் என கதவை தட்டிக்கொண்டு நிற்கின்றனர்.