Siragadikka aasai: காணாமல் போன ஸ்ருதி… பதறிப்போன குடும்பம்.. அடுத்தக்கட்ட ட்விஸ்ட்டா?
Siragadikka aasai: சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைய எபிசோட்டில் நடக்க இருக்கும் சுவாரஸ்ய தொகுப்புகள்.
ரோகிணியை அடிக்க மனோஜ் வர அவர் வேண்டாம் மனோஜ் அடிக்காதே. வலிக்குது என சமாளிக்கிறார். ஆனால் மனோஜ் உன்ன அடிக்கலை. உங்க அப்பாவை தான் அடிச்சேன். அவர் அப்போதானே போவாரு எனச் சொல்ல ரோகிணி இவனை வேற மாதிரி சமாளிக்கணும் என்கிறார்.
உடனே கூத்தி கூப்பாடு போட்டு மயங்கி விழுகிறார். மனோஜ் பயந்து பதற தெளிந்து எழுந்திரிக்கும் ரோகிணி தனக்கு இப்போ ரிலீவ்வா இருக்கு. எங்க அப்பா போன மாதிரி இருக்கு என அடி வாங்காமல் சமாளித்து விடுகிறார். உடனே மனோஜ் பாரு சாமியார் சொன்னதால தான் நீ சரியாகிட்ட என்கிறார்.
நீத்து ஹோட்டலில் ரவியை பார்த்து நீங்க கிளம்பலையா எனக் கேட்க ஒரு ஆர்டர் இருக்கு அத முடிச்சிட்டு போறேன் என்கிறார். அப்போ ஒருவர் சாப்பாட்டை கொட்டிவிட உடனே க்ளீன் பண்ணுங்க எனத் திட்டுகிறார் நீத்து.
அவர் க்ளீன் பண்ணுவதை பார்க்காமல் நீத்து வழுக்கி விழ அவர் நடக்க முடியாமல் போக அவரை ரவி தூக்கி கொண்டு ஹாஸ்பிட்டல் போக நிற்கிறார். அந்த நேரத்தில் ஸ்ருதி இதை பார்த்துவிடுகிறார். கோபத்துடன் வெளியில் சென்று விட நீங்க ஸ்ருதியை பாருங்க என நீத்து கூற ரவி பங்ஷனில் பார்த்துக்கொள்கிறேன் என ஹாஸ்பிட்டல் கூட்டி செல்கிறார்.
எல்லாரும் கிளம்ப முத்துவும் மீனாவும் ரொமான்ஸ் செய்து கொண்டே ரெடியாகின்றனர். ஸ்ருதி வீட்டுக்கு வராமல் இருக்க ரவி பதட்டத்துடன் இருக்கிறார். போகலாமா என அண்ணாமலை கேட்க நீங்க போங்க நான் ஸ்ருதியை அழைத்துக்கொண்டு வரேன் எனக் கூறிவிடுகிறார். ரவியை சந்தேகத்துடன் முத்து கேட்க அவர் நடந்த விஷயத்தை கூறுகிறார்.
இதுல உன் தப்பு எதுவும் இல்ல. நாங்க போய் பல குரலை அழைச்சிட்டு வரோம். நீ யார்கிட்டையும் சொல்லாதே என மண்டபத்துக்கு அனுப்பி வைக்கிறார். ரவி பதற்றத்துடன் இருக்க மண்டபத்தில் ஆள்கள் வந்துக்கொண்டு இருக்க எல்லாரும் ஸ்ருதி இல்லாததை கேட்டு கொண்டு இருக்கின்றனர். விஜயா திட்டிக்கொண்டு இருக்கிறார்.