Siragadikka Aasai: ரோகிணியை சிக்க வைக்க தயாராகும் முத்து, மீனா… ஜெயிப்பாங்களா? இல்ல பல்ப் வாங்குவாங்களா?

By :  Akhilan
Update: 2025-01-21 03:22 GMT

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோட்டின் தொகுப்பு.

ரோகிணி வந்து வீடியோ வாங்கி சென்ற விஷயத்தை சீதா, மீனாவுக்கு கால் செய்து சொல்லுகிறார். மீனா அதான் வாங்கிட்டாங்கள. நமக்கு ஒரு காப்பி வாங்கி வை என்கிறார். சீதாவும் கேட்டு வாங்குகிறார்.

பின்னர் மீனா இந்த விஷயத்தை முத்துவிடம் சொல்லுகிறார். அப்போ மனோஜ் மற்றும் ரோகிணி வர மலேசியா ஆளுக்கு தெரிந்தவர் அங்கு பெரிய ஜெயிலில் அதிகாரியாக இருப்பதாக கூறுகிறார். அவரிடம் பேசினால் மாமனாரிடம் பேசலாம் என முத்து கூற வர ரோகிணி திட்டிவிடுகிறார்.

எங்க விஷயத்தில தலையிடாதீங்க எனக் கூற முத்து, மீனாவுக்கு சந்தேகம் வருகிறது. சிஐடி வேலை செய்யலாம் என முடிவெடுக்கின்றனர். பார்வதியை சென்று பார்க்க அவரிடம் என் நண்பருக்கும் வெளிநாட்டில் இருக்கும் பெண்ணாக வேண்டும் என்கிறார்.

ஆனால் முத்துவிடம் பார்வதி எனக்கு எப்படி அவங்களாம் தெரியும். ரோகிணி வெளிநாட்டில் இருந்து வந்ததே அவ சொல்லி தான் தெரியும். ரோகிணிக்கு அப்புறம் தான் அதுவும் தெரியும் எனக் கூறிவிடுகிறார். இவரிடம் பெரிய தகவல் இல்லை எனக் கூறி வித்யாவை பார்க்க செல்கிறார்.

வித்யாவை சைட் அடிக்கும் ஆள் வந்து அவரிடம் பேசி செல்கிறார். பின்னர் மீனா வந்து நைசாக பேச தொடங்க ரோகிணி குறித்து கேள்வி கேட்க மாற்றி மாற்றி பேசுகிறார். இதில் மீனாவுக்கு சந்தேகம் வந்து விடுகிறது. இருந்தும் வித்யா சமாளித்து அனுப்பி விடுகிறார்.

இதை ரோகிணிக்கு கால் செய்து சொல்ல முத்து நீ மலேசியாவில் இருந்து வந்திருப்பது குறித்து சந்தேகம் வந்து இருக்கலாம் என கூறுகிறார். ரோகிணிக்கு அதிர்ச்சியாகி மனோஜிடம் முத்து காசு குறித்து வித்யாவிடம் விசாரித்ததாக கூறுகிறார்.

மீனாவின் மாலை பெட்டியை ஆட்களை வைத்து சிந்தாமணி எடுத்துக்கொண்டு தன்னுடைய வீட்டிற்கு வர வைக்கிறார். அங்கு வரும் மீனாவிடம் நீ என்கூட சேர்ந்துக்கோ. நீ சம்பாரிக்கிறதை விட அதிகம் காசு தரேன் என்கிறார். ஆனால் மீனா நீங்க வேணா என்கூட சேருங்க. உங்களுக்கு நான் காசு தரேன் என திட்டிவிட்டு செல்கிறார்.

வீட்டிற்கு வரும் முத்து விண்ணப்பத்தை கொண்டு வந்து கையெழுத்து போட சொல்கிறார். மனோஜ் அண்ணாமலையிடம் சொத்தை எழுதி வாங்குறானா. விசாரிச்சு போடுப்பா என்கிறார். முத்து எனக்கு அந்த புத்தி இல்ல. இது பாஸ்போர்ட் அப்ளிகேஷன் என்கிறார்.

நானும், மீனாவும் இல்ல இல்ல குடும்பத்துடன் மலேசியா போகலாம் என்கிறார். செலவு ஆகுமே எனக் கூற போற டிக்கெட் செலவு தான். அங்க தான் பார்லர் அம்மா வீடு இருக்கு, கார் இருக்கு அத பயன்படுத்திக்கலாம். ரோகிணி வீட்ல அதுகூட செய்ய மாட்டாங்களா என்கிறார். இதில் ரோகிணி அதிர்ந்து நிற்கிறார்.

Tags:    

Similar News