விமானத்தில் இருந்து தொப்பென குதித்த குக் வித் கோமாளி சிவாங்கி!.. அய்யய்யோ வீடியோவை பார்த்தீங்களா?..

by SARANYA |
விமானத்தில் இருந்து தொப்பென குதித்த குக் வித் கோமாளி சிவாங்கி!.. அய்யய்யோ வீடியோவை பார்த்தீங்களா?..
X

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக் கொண்டு பாடல்களை பாடி அசத்தியவர் தான் சிவாங்கி. அதன் பின்னர் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். விஜய் டிவியில் பிரியங்கா பிக் பாஸ் போட்டியாளராக சென்ற நிலையில், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியையும் சிவாங்கி தொகுத்து வழங்கினார்.

விஜய் டிவியை தாண்டி சினிமாவில் படங்களில் நடிக்கத் தொடங்கிய சிவாங்கிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தான் நடித்த டான் படத்தில் ஒரு சூப்பரான கதாபாத்திரத்தைக் கொடுத்தார். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் இடையே கல்லூரியில் சிவாங்கியும் மாணவியாக நடித்து கலக்கினார்.


அதன் பின்னர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், காசேதான் கடவுளடா, ஷாட் பூட் த்ரீ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஜொலித்தது போல வெள்ளித்திரையில் சிவாங்கியால் பெரிதாக ஜொலிக்க முடியவில்லை.

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சராக வலம் வரும் சிவாங்கி இன்று தனது 25வது பிறந்தநாளை துபாயில் படு தூளாக கொண்டாடியுள்ளார். விமானத்தில் இருந்து குதித்து ஸ்கை ஜம்பிங் செய்து சாகசம் செய்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார்.

தேர்ந்த பயிற்ச்சியாளர் உடன் விமானத்தில் இருந்து பாராசூட் கட்டிக் கொண்டு குதித்து, துபாய் வானத்தில் சிவாங்கி மெர்சலாக குதித்து, அதன் பின்னர், பாராசூட் ஓபன் பண்ணி தரையிரங்கிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அவருக்கு விஜய் டிவி பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story