6 வருடம்… கோமாவில் இருந்த சன் சீரியல் நடிகை… இதெல்லாம் சினிமாவில தானே நடக்கும்!
Caroline Tamil Serial Actress,Actress: பொதுவாக ஒருவர் கோமாவில் செல்வது அவருக்கு நியாபக மறதி வருவது என்பது எல்லாமே சினிமாத்தனமாக தோணும். ஆனால் ஒரு நடிகைக்கு இது உண்மையில் நடந்த அதிர்ச்சி தகவலை தெரிவித்து இருக்கிறார்.
ஐடியில் வேலை செய்து வந்த கேரோலின் மாடலிங்கிற்கு மாறினார். பின்னர் சன் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார். பிரபலமாக நடித்து வந்தவர் மேக்கப் ஆர்டிஸ்ட் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்தார்.
இருவருமே தங்கள் கேரியரில் பிசியாக இருந்தனர். பின்னர் கேரோலின் கர்ப்பமானார். ஆறு மாதம் இருக்கும் போது மொத்தமாக விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டில் ஓய்வில் இருந்து இருக்கிறார். குழந்தை பிறந்த பிறகும் கேரோலின் நல்ல நிலையிலே இருந்துள்ளார்.
தொடர்ந்து, இவர் குழந்தை ஐந்து மாதம் இருக்கும் போது திடீரென தலைச்சுற்றி மயங்கி விழுந்து இருக்கிறார். அப்போது கோமாவிற்கு சென்றவர். ஆறு மாதங்களாக கோமாவிலே இருந்துள்ளார். இவரை கவனித்துக்கொள்ள ஒருநாளைக்கே ஒரு லட்சம் வரை செலவு ஏற்பட்டதாம்.
கோமாவில் இருந்து கண் விழித்தாலும் இவருக்கும் கணவர், குழந்தை பற்றி எதுவுமே தெரியவில்லையாம். பின்னர் கல்யாண வீடியோ, மற்ற புகைப்படங்களை காட்டி கரோலினுக்கு மறந்த விஷயங்களை சொல்லி இருக்கின்றனர். இருந்தும் அது நியாபகம் வராமல் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்.
இருந்தாலும் இன்னும் ஐந்து வருடமாக அவரின் வாழ்க்கையில் நடந்த எந்த விஷயமும் நியாபகத்திற்கு வரவில்லையாம். தற்போது மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறாராம் கரோலின். ஆனால் கோமாவில் இருந்த போது கழுத்து ட்யூப் போட்டுள்ளனர்.
அதில் ஏற்பட்ட மிகப்பெரிய தழும்பால் வரும் வாய்ப்புக்களை ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறாராம். விரைவில் இதற்கான பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பின்னர் மீண்டும் கரோலின் நடிக்கும் முடிவில் உள்ளாராம். கரோலின் தன்னுடைய பேட்டியில் சொல்லி கண்ணீர் விட்டது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.