சிவசங்கரியின் திட்டம்… ஆனந்தியின் வைராக்கியம்… களைக்கட்டும் சன் டிவி சீரியல்களின் புரோமோ அப்டேட்!..

சன் டிவியில் டிஆர்பியில் முதலிடத்தில் இருக்கும் சீரியல்களின் புரோமோ அப்டேட்

By :  Akhilan
Update: 2024-12-14 03:44 GMT

Sun serials: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டிஆர்பி சூப்பர் ஹிட் சீரியல்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் ப்ரோமோ தொகுப்புகள்.

கயல்

கயல் எழிலிடம் நமக்கு லோன் கொடுக்க மறுத்தாங்கல்ல. அப்பவே எனக்கு தெரிஞ்சு போச்சு. உன்கிட்ட இருந்து என்ன பிரிக்க அவங்க எந்த லெவலுக்கு வேணாலும் போவாங்க. வேதவல்லி ஆதிரை அம்மாவிடம் உங்க மகன் என் பெண்ணிடம் ஏதாச்சும் பண்ணான்னு வச்சுக்கோங்களேன்.

நானும் வேற மாதிரி ரியாக்ட் பண்ற மாதிரி இருக்கும் என்கிறார். கயல் பெரியப்பா வீட்டிற்கு வந்து எழிலோட அம்மா இப்படி ஒரு காரியத்தை செஞ்சு வச்சிருக்காங்க என்கிறார். கயல் நீங்க எதை பத்தி பேசுறீங்க எனப் புரியல எனக் கூற வீடியோ ஒன்றை காட்டுகிறார். இதில் எழில் கோபமாக கிளம்புகிறார்.

சிங்கப் பெண்ணே

கருணாகரனிடம், போட்டிங்கிறது என்னை ஹாஸ்டல்ல வழுக்கி விழ வைத்து தோற்கடிக்க நினைச்சாங்களே அப்பவே ஆரம்பிச்சிடுச்சு என்கிறார் ஆனந்தி. மித்ராவிடம் அங்கு இருப்பவர் ரொம்ப கான்ஃபிடன்ட்டா பேசிட்டு போறா என்கிறார்.

பேசினா மட்டும் போதாது ஜெயிச்சு காட்டணும் என்கிறார் மித்ரா. பின்னர் தான் ஒரு ஐடியா செல்வதாக கருணாகரிடம் சொல்கிறார். அன்பு போட்டி போடுபவர்களிடம் இந்த போட்டியில் பீஸ் மட்டும் வெற்றியை முடிவு செய்யாது. குவாலிட்டியும் தான் ஆரம்பிங்க என்கிறார். அந்த நேரத்தில் கருணாகரன் வந்து ஒரு நிமிஷம் இருங்க என்கிறார்.

மருமகள்

ஆதிரையின் அப்பா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவர் சித்தி நம்ம பத்திரத்தை கொடுக்காததால் தான் மயக்கம் போட்டு விழுந்து விட்டதாக நினைத்துக் கொள்கிறார். அதிரை டாக்டரிடம் எங்க அப்பாவை எப்படியாவது காப்பாத்திருங்க என்கிறார்.

அதற்கு டாக்டர் உங்க அப்பா விஷம் சாப்பிட்டு இருப்பதாக அதிர்ச்சி கொள்கிறார். இதனால் ஷாக்காகவும் ஆதிரை அவர் சித்தியிடம் என்ன ஆச்சு என கேட்கிறார்.

அன்னம்

ரம்யா தன்னுடைய மொபைலில் சார்ஜ் இல்லை எனக் கூறி அன்னத்தின் மொபைலை வாங்கி கார்த்திக் இருக்கு கால் செய்கிறார். வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கார்த்திக் ஃபோனை பார்த்துக் கொண்டிருக்கிறார். வீட்டில் செந்தில் கூப்பிடறவங்க ஒழுங்கா கூப்பிட்டா வரவங்க ஒழுங்கா வர போறாங்க என்கிறார்.

அன்னம் வீட்டிற்கு வருகிறார். தன் மாமாவிடம் என்ன பிடிக்காம இருக்க அத்தைக்கு ஆயிரம் காரணம் இருக்கு. உங்கள பிடிக்காம போனதுக்கு நான் மட்டும் தான் ஒரே காரணம் என்கிறார்.

மூன்று முடிச்சு

நந்தினியின் கல்யாண ஆல்பத்தை சுந்தரவல்லி கிழித்து விடுகிறார். நந்தினி தன்னுடைய அக்காவிற்கு கால் செய்து, அவங்க அம்மா பையன் என்ன வேணும்னாலும் செஞ்சுட்டு போட்டும். ஆனா அவங்களுக்குள்ள மாட்டி திக்கித் தவிக்கிறது என்னோட வாழ்க்கை தானே அக்கா.

மினிஸ்டர் வீட்டிற்கு கல்யாணம் ஆல்பம் வர நின்னுபோன கல்யாணத்துக்கு ஆல்பமா எடுத்துட்டு வரீங்க போங்கடா என திட்டுகிறார். அப்போ அர்ச்சனா அவங்களை நில்லுங்க என்கிறார். சூர்யா சுந்தரவல்லி தூக்கி எறிந்த போட்டோவை எடுத்து இந்த மாதிரி ஜோடி யாருக்கு கிடைக்குமா எனச் சொல்லி முத்தம் கொடுக்கிறார். இதை பார்த்து சுந்தரவல்லி கடுப்பாகிறார்

Tags:    

Similar News