Serial TRP: ஒரே வாரத்தில் சன் சீரியல்கள் செய்த சம்பவம்… சறுக்கி விழுந்த விஜய் சீரியல்கள்… போச்சா?
Serial TRP: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் டிஆர்பி வாரவாரம் வெளியிடப்பட்டு வரும் அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
சீரியல் டிஆர்பிகளில் எப்போதுமே சன் மற்றும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் டாப் 10 இடத்தை பிடிக்கும். அந்த வகையில் இந்த வார டிஆர்பியின் பத்தாவது இடத்தை விஜய் தொலைக்காட்சியின் சின்ன மருமகள் சீரியல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் எட்டாவது இடத்தில் இருந்த விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன்2 ஒரு இடம் சறுக்கி தற்போது ஒன்பதாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த வாரம் ராஜியின் கல்யாண விஷயம் உடைய இருப்பதால் டிஆர்பி யில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல கடந்த வாரம் ஆறாவது இடத்திலிருந்து விஜய் தொலைக்காட்சியின் அய்யனார் துணை சீரியல் மிகப்பெரிய மாற்றமாக இந்த முறை எட்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்த சீரியலின் கதை தற்போது டல் அடிக்க தொடங்கியிருப்பதாக ரசிகர்கள் கற்றுத் தெரிவித்து வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சி சீரியல்களுக்கு எதிர்மாறாக சன் சீரியல்கள் முன்னேற்றத்தை கண்டு வருகிறது. அந்த வகையில் ஒன்பதாம் இடத்தில் இருந்த அன்னம் சீரியல் தற்போது இரண்டு இடம் முன்னேறி ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது.
அதுபோல ஒரு இடம் முன்னேறி சன் தொலைக்காட்சியின் மருமகள் சீரியல் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. தேவையில்லாத கதைகளத்தால் தற்போது விஜய் தொலைக்காட்சியின் டாப் ஒன் தொடரான சிறகடிக்க ஆசை ஐந்தாம் இடம் பிடித்திருக்கிறது.
எப்போதும் முதல் மூன்று இடங்களை தக்கவைத்துக் கொண்டிருந்த சன் தொலைக்காட்சி தற்போது நான்கு இடங்களை தன் வசப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நான்காம் இடத்தையும், கயல் சீரியல் மூன்றாம் இடத்தையும், மூன்று முடிச்சு சீரியல் இரண்டாம் இடத்தையும் பெற்று இருக்கிறது.
கடந்த சில வாரங்களாகவே ஆனந்தியின் கர்ப்ப விஷயம் ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருக்கிறது சன் தொலைக்காட்சியின் சிங்க பெண்ணே சீரியல். இந்த வாரம் சன் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் விட்ட இடத்தை பிடிக்க விஜய் தொலைக்காட்சி என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.