முத்துவின் தீர்ப்பு... இனியா வாய் குறையாதே... பாண்டியன் சங்கடம்
விஜய் டிவி தொடர்களின் இன்றைய எபிசோட்கள்
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்
சிறகடிக்க ஆசை
விஜயா மனோஜ் மற்றும் ரோகிணியை மன்னித்து விட முத்து நாட்டாமை தீர்ப்பை தப்பாக சொன்னதால் இப்போ நான் ஒரு தீர்ப்பு சொல்லப்போறேன் என்கிறார். உனக்கு ஷேர் வேணுமா என மனோஜ் கேட்க அதெல்லாம் வேணாம். ரவிக்கும் வேணாம். ஆனா இது அப்பா காசுல வாங்குன ஷோரூம்.
அதனால் அப்பா தான் இந்த கடைக்கு ஓனர் என்கிறார். இதில் மனோஜ் மற்றும் ரோகிணி அதிர்ச்சி அடைகின்றனர். மனோஜ் இனி அங்கு மேனேஜர் தான் எனக் கூறிவிடுகிறார். தொடர்ந்து, ரோகிணி ரூமில் இருக்க அங்கு வரும் மனோஜை திட்டி தீர்த்து விடுகிறார்.
அப்போ விஜயா வந்து எல்லாம் நீங்க ஏமாத்துனதால தான். நீ உடனே 27 லட்சத்தை உங்க அப்பாக்கிட்டேந்து வாங்கி கொடு என்கிறார். ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். மாடியில் முத்து மற்றும் மீனா, மனோஜ் குறித்து கலாய்த்து பேசிக்கொண்டு இருக்கின்றனர். காலையில் அண்ணாமலையை கடை பொறுப்பேத்துக்கொள்ள முத்து அழைக்கிறார். கடையில் மனோஜ் இருக்க ஸ்ருதி மற்றும் ரவி வருகின்றனர்.
பாக்கியலட்சுமி
ராதிகா கோபிக்கு உப்புமாவை கொடுக்க ஈஸ்வரி தோசை தரவா என்கிறார். ராதிகா வேண்டாம் எனக் கூறிவிடுகிறார். இதில் வாக்குவாதம் முற்ற ஈஸ்வரி கடுப்பில் கிளம்பிவிடுகிறார். ராதிகா வேலைக்கு செல்லும்போது கோபியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி மற்றும் இனியா கடுப்பாகின்றனர். பாக்கியா வெளியில் கிளம்ப அவரிடம் இனியா ராதிகா ஏன் இங்க வரணும் என்கிறார். அவர்களை கூட்டிட்டு வந்தது உங்க அப்பா மீது அவர்கிட்ட தான் கேட்கணும் என்கிறார்.
மயூவை ஏன் உன்கூட தங்க வச்ச என சண்டை போட நீ உன்கூட தங்க வைக்கலை. பிடிக்காத விஷயத்தை நான் செய்ய விரும்பலை. இந்த பிரச்னையில நான் செஞ்சது உங்க டேடியை ராதிகாவை பார்க்க சொன்னதுதான். மத்த எல்லாத்தையும் செஞ்சது அவர்தான் எனக் கூறி சென்றுவிடுகிறார்.
இனியா கோபியிடம் பேச வருகிறார். அவர் உடல்நல பிரச்னையை பார்த்தவர் எதுவும் கேட்காமல் வந்துவிடுகிறார். இதை ஈஸ்வரியிடம் சொல்ல அவரும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ என்கிறார். ஈஸ்வரி கோபிக்கு ராதிகா சாப்பாட்டை கொடுக்காமல் பாக்கியா செஞ்சத்தை கொடுக்க பார்க்கிறார்.
அந்த நேரத்தில் பாக்கியா வந்துவிட நான் செஞ்சத்தை கொடுக்க கூடாது எனக் கூறிவிடுகிறார். அவங்க அவங்க வைஃப் செஞ்சத்தை அவங்க சாப்பிடுவாங்க என்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2
பாண்டியன் வெளியில் போகும்போது ரோட்டில் முத்துவேல் மற்றும் சக்திவேல் அவரை மிரட்டிக்கொண்டு இருக்கின்றனர். இவனை அசிங்கப்படுத்த வேண்டும் என்றால் அந்த கல்யாணத்தை நடத்தவிடாமல் செய்யணும் என்கிறார். வீட்டில் எல்லாரும் கல்யாண விஷயம் குறித்து பேசிக்கொள்கின்றனர்.
அப்போது மீனா கடை பிரச்னை குறித்து வீட்டில் இருப்பவர்களிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். லஞ்சமும் கொடுத்ததாக கூறிவிடுகிறார். பிரச்னை வந்தால் மாமா நான் இருக்கேன் என பாண்டியன் நம்பிக்கை தருகிறார். எல்லாரும் கடைக்கு செல்கின்றனர்.
பாண்டியனிடம் பழனி என் கல்யாணத்தை இவ்வளவு செலவு செஞ்சு செய்வீங்கனு நினைக்கலை என்கிறார். அவரை சமாதானம் செய்யும் பாண்டியன் வீட்டிற்கு வர டெக்கரேஷன் தயாராக இருக்கிறது. பழனி பங்ஷனுக்கு அண்ணன்களும் வர வேண்டும் என விரும்புவதாக கூறுகிறார்.