முத்துவின் திடீர் ஈகோ… ராதிகாவின் அதிரடி முடிவு… கோமதிக்கு கிடைத்த சந்தோஷம்!

விஜய் டிவி சீரியல்களின் இன்றைய எபிசோட் தொகுப்புகள்

By :  Akhilan
Update: 2024-12-13 05:27 GMT

விஜய் சீரியல்

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்ஹிட் தொடரான பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்2 மற்றும் சிறகடிக்க ஆசையில் நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை

முத்துவை காணாமல் மீனா தேடிக்கொண்டு இருக்கிறார். செருப்பு தைக்கும் பாட்டி, தாத்தா முதற்கொண்டு எல்லாரிடமும் கேட்கிறார். ஒயின்ஷாப்பிலும் தேடிவிட்டு வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு வர இந்திராவிடம் கால் செய்து சொல்லிவிடுகிறார்.

அண்ணாமலையும் இப்படி சொல்லாம போகலாமா எனக் கூறிவிட்டு படுக்க செல்கிறார். சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என மீனா சொல்ல முத்து 8500 ரூபாயை எடுத்து நீட்டுகிறார். உன்னைவிட அதிகம் சம்பாரிச்சேன் எனக் கூற மீனா அதிர்கிறார். அப்போ பிடிச்சவங்களிடம் கூட இனி பார்த்து பேசணும் போலயே என்கிறார். மீனா சாப்பிடாமல் படுக்க அவரை சாப்பிட வைக்கிறார் முத்து.

பாக்கியலட்சுமி

பாக்கியா வாக்கிங் சென்று இருக்க கோபியும் பின்னால் சென்று பேசி பார்க்கிறார். நீ இவ்வளோ ஸ்மார்ட்டுனு தெரியாது. தெரிஞ்சி இருந்தா உன்னை விட்டு போய் இருக்க மாட்டேன் எனக் கூற உங்கள காப்பாத்துனதுக்கு வருத்தப்பட வைக்காதீங்க என பாக்கியா கிளம்பி செல்கிறார்.

ராதிகா வீட்டை காலி செய்து விடலாம் என அவர் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார். அப்போ இனி டாடி வரமாட்டாரா என மயூ கேட்க அவர் பாட்டி அதெல்லாம் இல்லை நீ போன் செஞ்சு பேசு என்கிறார்.

செழியன் வேலைக்கு செல்லாமல் இருப்பது குறித்து ஜெனி கேள்வி கேட்கிறார். கோபி தன்னுடைய கான்டெக்ட்டை பயன்படுத்தி செழியனுக்கு ஒரு இண்டர்வியூவை செட் செய்து கொடுக்கிறார். ஈஸ்வரி தனக்கு பசிக்குதுனு சொல்லி சாப்பாடை வாங்கிக்கொண்டு சென்று கோபிக்கு கொடுத்து சாப்பிட சொல்கிறார்.

செல்வி ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு கொடுத்த விஷயத்தை பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். தொடர்ந்து ராதிகா கோபியை காண வர ஈஸ்வரி அவர் தூங்குவதாக சொல்கிறார். ஆனால் பாக்கியா ராதிகாவை போய் பார்க்க சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

பழனி ராஜி வீட்டுக்கு வந்து கோமதி வீட்டில் நடக்கும் விஷயங்களை கூறுகிறார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது கதிரை பார்க்க வேண்டும் என அப்பத்தா விருப்பப்படுகிறார். தொடர்ந்து, அவர் வெளியில் வர மீனா கோமதியை அழைத்து விடுகிறார்.

 

தொடர்ந்து பலரின் வற்புறுத்தலுக்கு பின்னர் அப்பத்தா கோமதி வீட்டிற்கு செல்கிறார். கோமதியும் ஆசையுடன் அம்மா வந்ததை பார்க்கிறார். கதிரை பார்த்து அப்பத்தா நலம் விசாரிக்கிறார். தொடர்ந்து எல்லோரும் பேசி சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News