சிக்கலில் ரோகிணி… ஈஸ்வரியால் கடுப்பில் பாக்கியா… சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம்!..

by Akhilan |
சிக்கலில் ரோகிணி… ஈஸ்வரியால் கடுப்பில் பாக்கியா… சந்தோஷத்தில் பாண்டியன் குடும்பம்!..
X

Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்புகள்.

சிறகடிக்க ஆசை

ரோகிணி கிருஷை அழைத்து கொண்டு பள்ளிக்கு செல்கிறார். அதே நேரத்தில் அண்ணாமலையை முத்து அழைத்து வருகிறார். பள்ளிக்குள் அவர்கள் வரும்போது உள்ளே அண்ணாமலையை பார்த்து விடுகிறார். இதை தொடர்ந்து ஆட்டோவில் மறைந்து இருக்கிறார்கள்.

பின்னர் வெளியில் செக்குரிட்டியிடம் அண்ணாமலை இங்கு வேலைக்கு சேர்ந்து இருப்பதை தெரிந்துக்கொண்டு வீட்டிற்கு வந்து விடுகிறார். கிரிஷ் இதனால் கோபமாகிவிடுகிறார். அம்மாவிடம் அங்கு அண்ணாமலையை பார்த்ததை கூற அவர் விஷயத்தை வீட்டில் சொல்லலாமே என்கிறார். ஆனால் ரோகிணி மறுத்துவிடுகிறார். தொடர்ந்து வாங்க இருக்கும் வீட்டை மனோஜ் மற்றும் ரோகிணி சுற்றி பார்க்கின்றனர்.

பாக்கியலட்சுமி

வீட்டில் கோபி மற்றும் ஈஸ்வரி இனியாவுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர். காலை ஈஸ்வரிக்கு மட்டும் காபியை கொடுக்க கோபிக்கு கொடுக்க சொல்கிறார். ஆனால் பாக்கியா வைத்துவிட்டு செல்கிறார். தொடர்ந்து பாக்கியா எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு வாக்கிங் செல்கிறார். தொடர்ந்து கோபி எப்போ இவ எழுந்துப்பா உள்ளிட்ட சிலதை ஈஸ்வரி மற்றும் இனியாவிடம் கேட்டு ஆச்சரியப்படுகிறார்.

ராதிகா வர ஈஸ்வரி அவரை தடுக்கிறார். ஆனால் பாக்கியா நடுவில் புகுந்து ராதிகாவை உள்ளே அனுப்பி வைக்கிறார். பாக்கியா சமையலறையில் வேலை செய்து கொண்டு இருக்க கோபி ஈஸ்வரியை அழைக்கிறார். ஆனால் அவர் காதில் கேட்காமல் படுத்து கொள்கிறார். பின்னர் பாக்கியா சென்று கேட்க கோபி தண்ணி கேட்கிறார். செல்வி பாக்கியாவிடம் உன்னையும், சாரையும் சேர்க்கிற பிளானில் உங்க மாமியார் இருக்காங்க என்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்2

கதிரின் செய்தி பரவியதும் ராஜி தன் வீட்டின் முன் நின்று கத்திக்கொண்டு இருக்கிறார். பின்னர் வெளியில் வர வேண்டாம் டிவியை ஆன் செய்து பாருங்கள் என்கிறார். அந்த நேரத்தில் சக்திவேல் வந்துவிட அவரிடமும் திமிராக பேசுகிறார். பின்னர் ராஜி குடும்பத்தில் கதிரின் செய்தியை பார்க்கின்றனர்.

அண்ணன்களுடன் நின்று கதிர் மாடியில் பேசிவிட்டு தூங்குகிறார். அப்போது அங்கு வந்து பாண்டியன் கதிரை பார்த்து கண்ணீர்விட்டு செல்கிறார். கோமதியை அழைத்து கதிரை படிக்க சொல்லி வேலைக்கு போக வேண்டாம் என்கிறார். குழலி அழுதுக்கொண்டே வீட்டிற்கு வருகிறார். தம்பி விஷயத்தை சொல்லவில்லை என சண்டை போடுகிறார். அந்த நேரத்தில் மயிலின் குடும்பம் வர எல்லாரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

Next Story