ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..

by Akhilan |
ஒத்த வெற்றிக்காக ஏங்கும் முன்னணி நடிகர்… தனிஒருவனை கொடுத்த மோகன்ராஜா… தட்டிவிட்டு மொக்கை வாங்குறாரே!..
X

ThaniOruvan: ரீமேக் படங்களை மட்டுமே எடுத்து ஹிட்டடித்த இயக்குனர் மோகன் ராஜா சொந்தமாக உருவாக்கி வெற்றிக்கண்ட கதை தனி ஒருவன். இப்படத்தினை முதலில் அவர் வேறு ஒரு நடிகருக்காக தான் எழுதினார் என்ற ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜெயம் படத்தில் இருந்து மோகன் ராஜா இயக்கத்தில் வெளியாபா பெரும்பாலான திரைப்படங்கள் அதிகாரப்பூர்வ ரீமேக் படங்கள் தான். அதில் அவர் சொந்தமாக எழுதிய முதல் திரைப்படம் தனி ஒருவன். இப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

இதையும் படிங்க: கஜினி மாதிரி படையெடுத்த இயக்குனர்கள்! அசால்ட்டா தட்டி தூக்கிய லோகி.. கூலி படத்தில் சத்யராஜ் நடிக்க காரணம்

வில்லனாக அரவிந்த் சாமி மாஸான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதுமட்டுமல்லாமல் ஹீரோவுக்கு டப் கொடுத்ததில் இருந்தே படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. இப்படத்தின் கதை, பாடல்கள் என எல்லாமே மிகப்பெரிய அளவில் வைரலானது. இயக்குனராக மோகன் ராஜாவுக்கு பெரிய வெற்றி இப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் கேரியரிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால் ராஜா இந்த படத்தின் கதையை முதலில் ரவிக்கு எழுதவில்லையாம். பிரபல நடிகரான பிரபாஸுக்கு தான் இந்த படத்தின் கதையை எழுதி இருக்கிறார். ஆனால் அப்போது அவர் காதல் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டியதால் இந்த படத்துக்கு நோ சொல்லிவிட்டாராம்.

இதையும் படிங்க: பிரேமலு பிரபலத்தை வளைத்து போட்ட குட் பேட் அக்லி டீம்… கூடவே இன்னொரு வில்லன் நடிகரும் வராராம்!…

அதை தொடர்ந்தே ரவியை வைத்து இப்படத்தினை இயக்கி ஹிட் கொடுத்தார் மோகன் ராஜா. பாகுபலி படத்தினை தொடர்ந்து இன்னொரு வெற்றியை ருசிக்க பிரபாஸ் பலவாறு போராடி கொண்டு இருக்கும் நிலையில் தானா வந்த மாஸ் படத்தினை இப்படி மிஸ் பண்ணிட்டீங்களேஜி என ரசிகர்கள் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.

மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அபிஷேக் பச்சனை வில்லனாக நடிக்க வைக்க படக்குழு பெரிய அளவில் முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story