அந்த படத்தையே 'வேஸ்ட்' பண்ணிட்டாரு... மியூசிக்கால் நடந்த 'குடுமிபிடி' சண்டை!

by சிவா |
அந்த படத்தையே வேஸ்ட் பண்ணிட்டாரு... மியூசிக்கால் நடந்த குடுமிபிடி சண்டை!
X

ராணுவத்தை மையமாக வைத்து வெளியான படத்தில் நாயகி, இசைமயமைப்பாளர் இருவருக்குமே நல்ல பெயர். இன்னும் திரையரங்குகளில் படம் ஓடவும் அவர்கள் தான் காரணம் என அனைவரும் புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் அந்த சின்ன இசையமைப்பாளரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையாம். நடிகரிடம் ஓபனாக நானாக இருந்தால் படத்தின் உணர்ச்சிகளை ரசிகர்களுக்கு நன்றாக கடத்தி இருப்பேன். அவர் எல்லாம் ஒரு ஆளா? இப்படி பண்ணிட்டீங்களே என கொந்தளித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: புஷ்பா 2 ஆடியோ லான்சில் அஜித் படத்தின் அப்டேட்!.. ஆனா?!.. தயாரிப்பாளர் வைத்த ட்விஸ்ட்!..

இந்த விஷயம் இசையமைத்தவருக்கு தெரியவர போனைப் போட்டு கண்டபடி கழுவி ஊற்றினாராம். விஷயம் தெரிந்து நடிகர் இருவரையும் சமாதானம் செய்துள்ளார். நடிப்பில் ஆயிரம் குறை சொன்னாலும் இசையில் அவரை அடித்துக்கொள்ள முடியாது.

பல்வேறு படங்கள் அவரது இசைக்காகவே ஓடியுள்ளன. இப்படி இருக்கும்போது இவர் என்ன பெரிய ஆளு போல இப்படி துள்ளுறாரே என விஷயம் தெரிந்தவர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

இதையும் படிங்க: சிவா என் தம்பி மாதிரி.. எல்லா நேரத்துலயும் கூட இருப்பேன்! சிவகார்த்திகேயனுக்காக உருகிய தனுஷ்

தன்னுடைய படங்களின் வெற்றிக்கு அந்த சின்ன இசை அமைப்பாளரின் இசையும் முக்கிய காரணம் என்பதால் அடுத்த பட வாய்ப்பினை அவருக்கு தூக்கிக் கொடுத்து சமாதானம் செய்துள்ளாராம் ஹீரோ. பாதி பாடல்கள் காப்பி தான் அடிக்கிறார்.

படத்தில் இசை ஒரே இரைச்சலாக இருந்து காதை கிழிக்கிறது. தானே பாடுகிறேன் என்ற பெயரில் பாடகர்களின் வாய்ப்பினை கெடுப்பதும் இன்றி இப்படி மற்ற இசையமைப்பாளர்களுடன் சண்டைக்கு வேறு செல்கிறாரே? என ரசிகர்கள் தலையில் அடித்துக் கொள்கின்றனர். இன்னும் எத்தனை நாளைக்கு ஆட்டம் போடுவார் என்று பார்க்கலாம்? என்பது கோலிவுட் அபிமானிகளின் எண்ணமாக உள்ளது.

Next Story