விஜய், விஜயகாந்தை வைத்து நடந்த பட்டிமன்றம்! தளபதிக்காக எஸ்.ஏ.சி பார்த்த வேலை..
தமிழ் சினிமாவில் விஜயின் அபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த விஜயை ஒரு ஹீரோவாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா தகப்பனார்களுக்கும் இருக்கும். அதே ஆசைதான் எஸ்.ஏ.சிக்கும் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் பல கிண்டல்களுக்கு ஆளான விஜயை வெறுமனே ஒரு படத்தில் ஹீரோவாக்கினால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்தார் எஸ்.ஏ.சி. அதனால் அந்த நேரத்தில் மிகவும் மக்கள் அபிமானங்களை பெற்றவராக விஜயகாந்த் இருக்க அவரை ஒரு கெஸ்ட் ரோலில் […]
தமிழ் சினிமாவில் விஜயின் அபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவராக விஜயகாந்த் இருந்திருக்கிறார். குழந்தை நட்சத்திரமாகவே நடித்து வந்த விஜயை ஒரு ஹீரோவாக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா தகப்பனார்களுக்கும் இருக்கும். அதே ஆசைதான் எஸ்.ஏ.சிக்கும் இருந்திருக்கிறது. ஆரம்பத்தில் பல கிண்டல்களுக்கு ஆளான விஜயை வெறுமனே ஒரு படத்தில் ஹீரோவாக்கினால் ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்தார் எஸ்.ஏ.சி.
அதனால் அந்த நேரத்தில் மிகவும் மக்கள் அபிமானங்களை பெற்றவராக விஜயகாந்த் இருக்க அவரை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து அதன் மூலம் விஜயின் படத்தை மக்களிடையே கொண்டு போகலாம் எனக் கருதி இயக்கி படம்தான் செந்தூரப்பாண்டி திரைப்படம். அந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக யுவராணி நடித்திருப்பார்.
படம் வெளியாகி 100 நாள்களை கடந்து வெள்ளிவிழாவையும் கொண்டாடியது. அப்போது படத்தின் 100 வது நாளை கொண்டாட படக்குழு திட்டமிட்டிருக்கின்றனர். அந்த விழாவிற்கு திண்டுக்கல் ஐ லியோனியின் பட்டிமன்றமும் ஏற்பாடு செய்யப்பட்டதாம். பட்டிமன்றத்திற்கான தலைப்பு செந்தூரப்பாண்டியின் வெற்றிக்கு காரணமாக இருப்பது காதலா? இல்ல வீரமா? என்ற தலைப்பாம்.
எஸ்.ஏ.சியின் வீட்டில் தான் லியோனிக்கு விருந்து வைத்தார்களாம். அப்போது எஸ்.ஏ.சி லியோனியிடம் நீங்கள் பேசப்போகிற தலைப்பில் காதல் விஜயை பற்றியும் வீரம் விஜயகாந்தை பற்றியுமாகத்தான் இருக்கும். அதனால் தீர்ப்பு காதல் என்று சொன்னால் எனக்காக நடிக்க வந்தவர் விஜயகாந்த். அதனால் அவர் ஒரு மாதிரி நினைத்துக் கொள்வார்,
அதே போல வீரம் என்று தீர்ப்பு சொன்னால் என் மகன் முதன் முதலில் ஹீரோவாக நடிக்கும் படம். அது பாதிக்கும். ஆகவே இரண்டும் கலந்த மாதிரி தீர்ப்பு கொடுங்கள் என்று கேட்டாராம். அவர் கூறியதை ஏற்று லியோனி செந்தூரப்பாண்டி படத்திற்கு இரு கண்களாக அமைந்தது காதலும் வீரமும் தான் என்று கூறி தீர்ப்பு சொன்னாராம்.
இதையும் படிங்க : ரோபா சங்கர் நிலைதான் மஞ்சுளாவுக்கும் வந்துச்சா?.. ஓப்பனாக கூறிய வனிதா…