‘லியோ’ படம் ஒன்னும் சும்மா ஓடல! அதுக்கு பின்னாடி இருந்தது இவங்கதான்.. பிரபல இயக்குனர் பகீர்

by Rohini |
vijay
X

vijay

Leo movie: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க விஜய் சும்மா ஆக்‌ஷனில் பின்னி பிடலெடுத்திருப்பார். விஜய் - லோகேஷ் இரண்டாவது முறையாக அமைந்த கூட்டணியில் உருவான படம் லியோ என்பதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்தார்கள். ஆனால் லியோ படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இந்த நிலையில் பிரபல சினிமா இயக்குனரான பிரவீன் காந்தி விஜயை பற்றி அவருடைய கருத்தை கூறினார். இதுதான் இப்போது வைரலாகி வருகின்றது. அதாவது சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வலம் வருபவர் நடிகர் விஜய். அவர் தனது மக்கள் இயக்கம் சார்பாக 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் போட்டியிட்டார்கள்.

இதையும் படிங்க: விஜயகாந்த் வேறலெவல் வில்லனாக நடித்த படங்கள்.. ஏழாம் அறிவு டாங்லீக்கே முன்னோடி கேப்டன்தானாம்!

அதில் வெற்றியும் கண்டார்கள். அதுவே விஜய் இன்னும் அரசியலில் தீவிரம் காட்ட வழி வகுத்தது. வரப் போகும் நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய படை பலத்துடன் விஜய் போட்டியிட இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் ஒரு சின்ன விஜயகாந்தாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார். விஜயகாந்தின் மகன்களும் பல உதவிகளை செய்தாலும் அவர்கள் மீது இன்னும் மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. வெறும் அன்பு மட்டுமே உள்ளது.

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் பணத்தை திணிப்பீர்கள்? விஜய் சொன்னாலே 2047 ஆம் ஆண்டு இந்தியா வல்லரசு நாடாகும்.அவரின் அரசியல் வருகை சாதாரணமாக இருக்காது. 2036 ஆம் ஆண்டு விஜய் தனித்து நிற்பார். மேலும் அவரின் லியோ படம் சுமாராக இருந்தாலும் 400 கோடி வரை வசூல் பெற்றது. அதற்கு காரணம அவரது ரசிகர்கள்.

இதையும் படிங்க: ரஜினி பட வசூலை பார்த்து உருவான அஜித் படம்!.. கடைசியில் ரிசல்ட் இதுதான்!..

ஒரு பக்கம் ஜெயிலரை முந்த வேண்டும். வழக்கம் போல் அஜித்தை ஜெயிக்க வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும். இதையெல்லாம் நினைத்தே ரசிகர்கள் அந்தப் படத்தை ஓட வைத்திருக்கிறார்கள் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை ப்ரவீன் காந்தி கூறினார்.

Next Story