ரஹ்மான் நிகழ்ச்சிக்கு அதிக டிக்கெட் வித்ததுக்கு காரணம் இதுதானாம்!.. இப்படியா பண்ணுவீங்க!...

AR Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியும், அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் சந்தித்த பிரச்சனைகளும்தான் ஹாட் ஆப் தி டாப்பிக்காக இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறார். ரஹ்மானை டார்க்கெட் பண்ண நினைப்பவர்கள் அவர்தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும், மற்றவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் காரணம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். ஒருபக்கம் யுவன் சங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு போன்ற திரைப்பலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மறக்குமா நெஞ்சம் எனகிற […]

Update: 2023-09-12 06:48 GMT

AR Rahman: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் நடந்த குளறுபடியும், அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவர்கள் சந்தித்த பிரச்சனைகளும்தான் ஹாட் ஆப் தி டாப்பிக்காக இருக்கிறது. சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறார். ரஹ்மானை டார்க்கெட் பண்ண நினைப்பவர்கள் அவர்தான் இந்த பிரச்சனைக்கு காரணம் எனவும், மற்றவர்கள் அந்நிகழ்ச்சியை நடத்தியவர்கள்தான் காரணம் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

ஒருபக்கம் யுவன் சங்கர் ராஜா, கார்த்தி, குஷ்பு போன்ற திரைப்பலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மறக்குமா நெஞ்சம் எனகிற பெயரில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு 20 ஆயிரம், 10 ஆயிரம் என பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் உள்ளே செல்ல முடியாமல் சில மணி நேரம் காத்திருந்தனர்.

இதையும் படிங்க: எங்க அப்பா செஞ்சதெல்லாம் இனிச்சிதா? பிரச்னையை முடிக்க சொன்னா லிஸ்ட் போட்டு குட்டு வாங்கும் கதிஜா ரஹ்மான்…

இதனால் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் வாகனமே டிராப்பிக்கில் சிக்கியது. அப்படி உள்ளே போன பலருக்கும் இருக்கை வசதி இல்லை. நின்று கொண்டே இருந்தனர். இதில், கடுப்பாகி பலரும் தங்களின் டிக்கெட்டை கிழித்து போட்டுவிட்டு அங்கிருந்து சென்றனர். நிகழ்ச்சியை நடத்திய நிறுவனம் சரியான வசதியை செய்யவில்லை என பலரும் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக அரசு தரப்பிலும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத ரஹ்மானும் இதில் சிக்கியது பலருக்கும் மனக்கஷ்டத்தை கொடுத்துள்ளது. இந்த நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடக்கவிருந்தது. ஆனால், மழை காரணமாக அன்று நடிக்கவில்லை. இரண்டாவது முறை நடக்கும்போதுதான் இந்த குளறுபடி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் பேரையே கெடுத்திருவார் போல! ஏன் அதையே பிடிச்சு தொங்குறீங்க? ஜேசனை விளாசும் பிரபலம்

ரஹ்மானின் இசை நிகழ்ச்சிகளை ஒரு மும்பை நிறுவனம்தான் நடத்துகிறது. முதன் முறை நிகழ்ச்சியை நடத்த அவர்களுக்கு ரூ.4.5 கோடி வரை பணத்தை கொடுத்துவிட்டனர். ஆனால், நிகழ்ச்சி நடக்கவில்லை. அடுத்துமுறையும் அழைத்ததால் மீண்டும். 4.5 கோடி வேண்டும் என கறாராக கேட்டு வாங்கிவிட்டனராம்.

அந்த நஷ்டத்தை சரி செய்யவே அதிக டிக்கெட்டுகளை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விற்றுள்ளனர். இதனால்தான் அதிகம் பேர் அந்நிகழ்ச்சிக்கு சென்று குளறுபடி நடந்துள்ளதாக இப்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: லியோ படத்தை பார்த்து ஷாக்கான தயாரிப்பாளர்… என்ன ஜி இப்டியா பண்ணுவீங்க! கடுப்பான லோகேஷ்!

Tags:    

Similar News