ஒரே குடியிருப்பில் விஜய், த்ரிஷா! அந்த போட்டோவுக்கு பின்னனியில் இப்படி ஒரு காரணம் இருக்கா?

Vijay Trisha: விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அரசியல் தரப்பில் இருந்தும் சினிமா பிரபலங்கள் தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் விஜய்க்கு வந்த வண்ணம் இருந்தன. இன்று விஜய் அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றி்யை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை மிகவும் வித்தியாசமான முறையில் திரிஷா சொல்லியதுதான் சமூக வலைதளங்களில் வைரலானது. அதுவும் புயலுக்கு பின் அமைதி அமைதிக்கு பின் புயல் என்ற ஒரு கேப்ஷனையும் பதிவிட்டு […]

By :  Rohini
Update: 2024-06-24 08:30 GMT

trisha

Vijay Trisha: விஜயின் ஐம்பதாவது பிறந்தநாளை அவருடைய ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். அரசியல் தரப்பில் இருந்தும் சினிமா பிரபலங்கள் தரப்பிலிருந்தும் ஏகப்பட்ட வாழ்த்துக்கள் விஜய்க்கு வந்த வண்ணம் இருந்தன. இன்று விஜய் அவர்கள் அனைவருக்கும் தன்னுடைய நன்றி்யை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தை மிகவும் வித்தியாசமான முறையில் திரிஷா சொல்லியதுதான் சமூக வலைதளங்களில் வைரலானது. அதுவும் புயலுக்கு பின் அமைதி அமைதிக்கு பின் புயல் என்ற ஒரு கேப்ஷனையும் பதிவிட்டு ஒரு லிஃப்டில் விஜயை புகைப்படம் எடுக்கும் மாதிரி திரிஷா நிற்பது போன்று அந்த போட்டோ இணையத்தில் வைரலானது.

இதையும் படிங்க: எல்லாம் போச்சே!.. பெயரை கெடுத்துக்கொண்ட விஷால்!.. கைவிட்ட திரையுலகம்!..

ஆனால் அது எங்கு எடுக்கப்பட்டது எப்போது எடுக்கப்பட்டது என்பதன் உண்மை தற்போது கோடம்பாக்கத்தில் வெளியாகி இருக்கின்றன. அதாவது விஜய் இப்போது ஆரியபுரத்தில் ஒரு பிரம்மாண்டமான அலுவலகத்தை வாங்கி இருக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியானது. அந்த அலுவலகம் இருக்கும் அதே அப்பார்ட்மெண்ட்டில் தான் திரிஷா ஒரு வீடு வாங்கி சில வாரங்களுக்கு முன்புதான் குடி போனதாகவும் தெரிகிறது.

இதற்கு முன் விஜய் நீலாங்கரை வீட்டில் இருந்தபோது அப்போதும் திரிஷா அங்கு ஒரு வீடு வாங்கி குடி போயிருந்தார். இதில் விஜய் இப்போது வாங்கி இருக்கும் அலுவலகம் கிட்டத்தட்ட 8500 சதுர அடியாம். அதன் மதிப்பு 25 கோடி என்று சொல்லப்படுகிறது. அதே அளவில் அங்கு ஒரு நான்கு அப்பார்ட்மெண்ட் தான் இருக்கிறதாம்.

இதையும் படிங்க: லைக்காவுடன் மீண்டும் பஞ்சாயத்து! – இந்தியன் 2-வை டீலில் விட்ட உலக நாயகன்…

இதில் த்ரிஷா வாங்கி இருப்பது 17 கோடி ரூபாயாம். அதனால் ஒரே அப்பார்ட்மெண்ட் எனும் போது அந்த லிப்ட் வசதி கண்டிப்பாக இருக்கும். ஒருவேளை இருவரும் அந்த லிப்டில் சந்தித்துக் கொண்ட போது அந்த புகைப்படத்தை எடுத்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே குருவி படத்தின் போதே இருவரை பற்றியும் அப்போதே சில கிசுகிசுக்கள் வெளியானது. ஆனால் அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் பிறகு லியோ படத்தில் இருவரும் இணைய மீண்டும் அந்த கிசுகிசு பெரிதாக பேசப்பட்டது. அதற்கேற்ப விஜயின் மனைவியும் லண்டனில் இருந்ததனால் ஒருவேளை இருவருக்கும் இதனால்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்குமோ என்றெல்லாம் செய்திகள் வெளியானது. இதற்கிடையில் இந்த புகைப்படமும் மேலும் ரசிகர்களின் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Tags:    

Similar News