டி.ராஜேந்தரிடம் அடுக்குமொழியில் சண்டைபோட்ட கலைப்புலி தாணு… இப்படியா இறங்கி அடிக்கிறது?

டி.ராஜேந்தர் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவரின் அடுக்குமொழி வசனங்கள்தான். அவ்வாறு அடுக்குமொழி வசனங்களில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்த டி.ராஜேந்தரிடமே அடுக்குமொழியில் சண்டை போட்டிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. அவர்கள் இருவரும் ஏன் அப்படி சண்டையிட்டார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். 1987 ஆம் ஆண்டு விஜயகாந்த், ரூபினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கூலிக்காரன்”. இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். டி.ராஜேந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் சம்பளமே வாங்காமல் பணியாற்றினாராம். ஏனென்றால் கலைப்புலி எஸ்.தாணுவும் […]

Update: 2023-04-15 00:24 GMT

T Rajendar and S Thanu

டி.ராஜேந்தர் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவரின் அடுக்குமொழி வசனங்கள்தான். அவ்வாறு அடுக்குமொழி வசனங்களில் கைத்தேர்ந்தவராக திகழ்ந்த டி.ராஜேந்தரிடமே அடுக்குமொழியில் சண்டை போட்டிருக்கிறார் கலைப்புலி எஸ்.தாணு. அவர்கள் இருவரும் ஏன் அப்படி சண்டையிட்டார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1987 ஆம் ஆண்டு விஜயகாந்த், ரூபினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கூலிக்காரன்”. இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்க, கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். டி.ராஜேந்தர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படத்தில் டி.ராஜேந்தர் சம்பளமே வாங்காமல் பணியாற்றினாராம். ஏனென்றால் கலைப்புலி எஸ்.தாணுவும் டி.ராஜேந்தரும் மிக நெருக்கமாக பழகி வந்தார்களாம்.

கலைப்புலி எஸ்.தாணு ஒரு திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் கைத்தேர்ந்தவர். அவர் தயாரித்த “கபாலி” திரைப்படத்தை விமானத்தில் விளம்பரப்படுத்தி அசரவைத்ததை நாம் பார்த்திருப்போம். 1970, 80களிலேயே அவர் தயாரிக்கும் திரைப்படத்தை மிகவும் விமரிசையாக விளம்பரப்படுத்துவாராம். மேலும் அத்திரைப்படங்களுக்கு ஏற்றவாறு போஸ்டர்களில் அடுக்குமொழி வசனங்கள் பலவற்றை அச்சடித்து அமர்க்களப்படுத்துவாராம். ரஜினிகாந்த் கூட அவரது விளம்பர யுக்தியை பாராட்டுவாராம்.

இந்த நிலையில் ஒரு முறை டி.ராஜேந்தர் செய்தித்தாள்களில் கலைப்புலி எஸ்.தாணுவை தாக்கியவாறு பல விளம்பரங்கள் வரத்தொடங்கியதாம். “விளம்பரத்திற்காக சிலர் எழுதலாம் துடுக்குமொழி, அது அனைத்தும் ஆகிடுமோ ராஜேந்தரின் அடுக்குமொழி” என்று விளம்பரம் வந்திருந்ததாம். இதற்கு பதிலடி கொடுப்பது போல் கலைப்புலி எஸ்.தாணு அவரது அடுத்த திரைப்படத்தின் விளம்பரத்தில், “அடுக்குமொழிக்கு சொந்தக்காரர் கலைஞர், அவர் வாங்கியதோ டாக்டர் பட்டம், மற்றவர் அடுக்குமொழிக்காக அடித்துக்கொள்கிறார் வீண் தம்பட்டம்” என எழுதினாராம்.

அதன் பின் ஒரு பேட்டியில் டி.ராஜேந்தர், “நண்பர்களாக படம் பண்ண சொன்னார்கள், முதுகில் குத்தும் துரோகி ஆகிவிட்டார்கள்” என்று கூறினாராம். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “நண்பனாக நடித்து நயவஞ்சகத்தால் பாதகம் செய்த பதர்” என்று ஒரு முழு பக்க விளம்பரத்தை கொடுத்தாராம். அதனை தொடர்ந்து டி.ராஜேந்தரே கலைப்புலி தாணுவை தொடர்புகொண்டு, “ஏன் இப்படி எழுதிருக்க?” என கேட்க, அதற்கு தாணு, “நீ எழுதியதற்குத்தான் நான் பதில் கொடுத்தேன்” என்றாராம். அதன் பின் டி.ராஜேந்தர், “இனி இந்த சண்டையை நிறுத்திக்கொள்வோம்” என கூறினாராம். அதன் பின் இருவரும் மீண்டும் நெருக்கமாக பழகத் தொடங்கினார்களாம்.

இதையும் படிங்க: அர்ஜூன் படத்தை பார்த்து பாதியிலேயே தியேட்டரை விட்டு அலறியடித்துக்கொண்டு ஓடிய ரசிகர்கள்… ஏன் தெரியுமா?

Tags:    

Similar News