திருச்சிற்றம்பலம் - தனுஷ் அடித்து ஆடும் இடம்.! ஜெயித்தாரா தோற்றாரா.?! விமர்சனம் இதோ...
இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று திரையரங்குககளில் வெளியான திரைப்படம் "திருச்சிற்றம்பலம்". இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி ஷங்கர், நித்தியா மேனன், ராசி கண்ணா ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பிரகாஷ் ராஜ், பராதிராஜா, முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இன்று வெளியான இந்த படம் எப்படி இருக்கிறது என்பதற்கான விமர்சனத்தை பார்க்கலாம்.
கதைக்களம்:
படித்து முடித்த ஒரு இளைஞன் சரியான வேலை கிடைக்காமல் டெலிவரி இளைஞனாக வேலை செய்து வருகிறார். அதாவது, அப்படியே வேலையில்லா பட்டதாரி ரகுவரன் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. தனுஷின் கதாபாத்திரம் அவரது தோழியாக வரும் நித்யா மேனன், தாத்தாவாக பாரதிராஜா, ஆகியோர் உடனான தனுஷின் கெமிஸ்ட்ரி மிகவும் அருமையாக ரசிக்கும் படி இருக்கிறது.
இதையும் படியுங்களேன்- நம்ம சூர்யாவின் மும்பை ரகசியம்.. அந்த 200 கோடி சமாச்சாரம்.! அண்ணன் வழியில் தம்பி கார்த்தி…
படம் முடிந்த பிறகும் நித்யா மேனன் தனுஷின் கதாபாத்திரங்கள் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறது. தனுஷ் நித்தியமேனனுகிடையே இருக்கும் நட்பு தனுஷுக்கு தந்தையான பிரகாஷ்ராஜுக்கும் இடையேயான உறவு தனுசுக்கு இரண்டு காதலிகளுக்கும் இடையேயான காட்சிகள் என படத்தின் கதைக்களம் திருச்சிற்றம்பலம் எனும் தனுஷின் வாழ்வை பற்றி நகர்கிறது.
விமர்சனம் :
முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது தனுஷ் நித்தியாமேனன், தனுஷ் ராசி கண்ணா, என காட்சிகள் மிக அருமையாக நடக்கிறது. அதேபோல், இரண்டாம் பாதியில் முதல் பாதியை ஒப்பிட்டால் இரண்டாம் பாதியில் சற்று தொய்வு தான் என்று கூற வேண்டும். முதல் பாதி இருந்த அளவுக்கு இல்லை என்பதை பலரின் கருத்தாகவும் இருக்கிறது.
படத்தில் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா, என அனைவரும் தங்களுக்கான கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் கச்சிதமாக எந்த குறையும் இன்றி செயல்படுத்தி உள்ளனர். இந்த மொத்த பலத்தையும் தூக்கி நிறுத்துவது தனுஷ் தான் என்று கூற வேண்டும். அந்த அளவுக்கு தனுஷ் பாரதிராஜா உடன் இருந்தாலும் சரி நித்தியா மேனனனாக இருந்தாலும் சரி, ராசி கண்ணா பிரகாஷ்ராஜ் ஆகியோரிடம் இருந்தாலும் சரி, அந்த காட்சியை மிகவும் அருமையாக வந்துள்ளது.
அனிருத்தின் பாடல்கள் பற்றி சொல்ல தேவையே இல்லை மிகவும் அற்புதமான பாடல்களை ஏற்கனவே கொடுத்து ஹிட் ஆகிவிட்டதால், அதனை படத்தின் காட்சிகளோடு பார்க்கையில் நன்றாக இருக்கிறது சில பாடல்கள் மற்றும் வேண்டுமென்றே படத்தில் திணிக்கப்பட்டது போல் இருந்தாலும் அவை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.
மற்றபடி இது தனுஷ் ஏற்கனவே புகுந்து விளையாடும் இடம் விஐபி ரகுவரன் கதாபாத்திரத்தை கொஞ்சம் மெருகேற்றி செய்தால் இந்த திரைப்படத்தை மிகச் சிறப்பாக செய்து விடலாம். அந்த வகையில், இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளித்த படமாகவே இருக்கிறது.
இருந்தாலும் மிகப்பெரிய கம்பேக் கொடுக்கும் அளவிற்கு இந்த திரைப்படத்தின் வரவேற்பு இருக்குமா என்பது சந்தேகம் தான். அது வரும் வாரங்களின் வசூல்களை பொறுத்து அமையும் மற்றபடி, யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் , ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் படத்தின் அதே சாயல் இந்த படத்திற்கும் அமைந்துள்ளது. ஒரு நல்ல குடும்பத்துடன் வந்து பார்க்கும் அளவிற்கு நல்ல திரைப்படமாகவே இந்த திரைப்படம் அமைந்துள்ளது என்று கூற வேண்டும்.