உள்ளுக்குள்ள இப்படி ஒரு பிரச்சினை! சிம்பு ஊறுகாவா? தக் லைஃப் படத்தில் ஜெயம் ரவி விலக இதுதான் காரணமா?

Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. சார்மிங்கான நடிகர்கள் மத்தியில் ஜெயம் ரவிக்கு என ஒரு கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் வருகின்றது. ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய அண்ணனால் அறிமுகமான ஜெயம் ரவி அடுத்தடுத்து தொடர் வெற்றியை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நடிகராக உயர்ந்தார். அதன் பிறகு ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் […]

By :  Rohini
Update: 2024-05-20 06:15 GMT

ravi

Actor Jayam Ravi: தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் ஹீரோவாக இருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. சார்மிங்கான நடிகர்கள் மத்தியில் ஜெயம் ரவிக்கு என ஒரு கிரேஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் வருகின்றது. ஜெயம் என்ற படத்தின் மூலம் தன்னுடைய அண்ணனால் அறிமுகமான ஜெயம் ரவி அடுத்தடுத்து தொடர் வெற்றியை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு நிலையான அந்தஸ்தை பெற்ற நடிகராக உயர்ந்தார்.

அதன் பிறகு ஒரு மாஸ் ஹீரோவாக ஆக்சன் ஹீரோவாக மக்கள் முன் பிரதிபலித்தார். சமீபகாலமாக ஜெயம் ரவி சோலோவாக நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இருந்தாலும் பொன்னியின் செல்வன் திரைப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. அதுவும் ஒரு மல்டி ஸ்டார் படம் என்பதால் ஜெயம் ரவிக்கு மட்டும் கிடைத்த வெற்றியாக கருதப்படாது.

இதையும் படிங்க: என்னது விஜய்க்கு மருத்துவ பரிசோதனையா? அப்போ முதல்வர் கனவு.. சுசித்ராவால் தளபதிக்கு வந்த ஆபத்து

அதில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் கிடைத்த வெற்றியாகத்தான் கருதப்படுகிறது. இந்த நிலையில் அடுத்ததாக ஜெயம் ரவி தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகினார். அதற்கு காரணம் சிம்பு என கூறப்பட்டது. ஏனெனில் துல்கர் சல்மான் படத்தில் இருந்து விலக அவருக்கு பதிலாக சிம்பு உள்ளே நுழைந்தார்.

ஏற்கனவே சிம்புவுக்கும் ஜெயம் ரவிக்கும் பிரச்சினை இருப்பதாகவும் அதனாலேயே ஜெயம் ரவி வெளியேறினார் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இதை மட்டுமே காரணம் கூற முடியாது என்பதால் இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் மிகக் குறைவு.

இதையும் படிங்க: பேத்தியை பத்தி அவங்க அப்பா, அம்மாகிட்ட கேளுங்க… ஏ.ஆர்.ரஹானா பதிலால் அதிர்ந்த ரசிகர்கள்…

அதற்கான காரணம் நான்கு நடிகர்களில் ஒருவராக அவருடைய கேரக்டர் இருந்ததால் அந்தப் படத்தில் மிக சொற்பமான சம்பளத்தையே மணிரத்தினம் கொடுத்தார். அதன் பிறகு தக் லைஃப் படத்தில் பொன்னின் செல்வனில் கொடுக்கப்பட்ட சம்பளத்தை விட பாதியாக கொடுத்த முன்வந்தாராம் மணிரத்தினம். கிட்டத்தட்ட நான்கு அல்லது ஐந்து கோடி என்று சொல்லப்படுகிறது. இது ஜெயம் ரவி வழக்கமாக வாங்கும் 15 கோடி அளவில் மிகக் குறைவான சம்பளம் என்பதால்தான் ஜெயம் ரவி விலகினார் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

Similar News