ரஜினி மேல எனக்கு இதுதான் கோபம்!.. அந்த நடிகர பார்த்து கத்துக்கணும்.. பொங்கிய மன்சூர் அலிகான்..
நடிகர் மன்சூர் அலிகான் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். பல படங்களில் வில்லனாகவும், ஒருசில படங்களில் ஹீரோவாக, குணசித்திர நடிகராக நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துளளார் மன்சூர் அலிகான்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், ரஜினி மீது தான் கோபமாக இருப்பதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் உச்ச நட்சத்திரம் தான். ஆனால் அவர் படத்தில் மட்டுமே ஹீரோவாக, சூப்பர் ஸ்டாராக இருக்கிறார் என்பது தான் எனக்கு வருத்தம்.
இதையும் படிங்க- இவங்களாலதான் ‘கைதி’ படமே மிஸ் ஆச்சு! மனம் திறந்த மன்சூர் அலிகான்
நிஜத்திலும் சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். தமிழ் மண்ணுக்கும், மக்களுக்கும் அவர் ஏதாவது செய்வார் என்று நினைத்தேன். அது நடக்கிவல்லை என்பது தான் எனக்கு கோபம். கன்னட சூப்பர் ஸ்டாராக இருந்தவர் புனித் ராஜ்குமார். அவர் சமீபத்தில் இறந்துவிட்டார்.
ஆனாலும் இன்று வரை மக்கள் யாரும் அவரை மறக்கவில்லை. நன்றியுடன் இருக்கிறார்கள். அதற்கு காரணம் லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களுக்கு அவர் செய்த உதவிகள். அதனால் தான் அவரை தெய்வமாக நினைத்து கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டு சூப்பர் ஸ்டார் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
நான் அவருடன் படையப்பா படத்தில் நடித்திருக்கிறேன். அவர் மிக சிறந்த நடிகர். ஆனால் படத்தில் மட்டும் தான் அவர் ஹீரோ. நிஜத்தில் அல்ல. படங்களில் இடதுசாரியாக நடிக்கிறார். நிஜத்தில் வலதுசாரியாக இருக்கிறார். அதுதான் எனக்கு பிரச்சனை என்று மன்சூர் அலிகான் வெளிப்படையாக அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க- பெண் நிரூபர் கேட்ட கேள்வி! உடனே பாத்ரூம் கூட்டிட்டு போய் காட்டிய மன்சூர் அலிகான் – என்னத்த சொல்றது?