சிக்குனா சும்மா இருப்போமா?.. விஜய் ரசிகர்களால் ‘துணிவு’ படக்குழு டோட்டல் அப்செட்!..

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தின் அதே ரிலீஸ் தேதியில் விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒன்றாக ஒரே தேதியில் பொங்கல் டிரீட்டாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க போகிறதா ? இல்ல எமனாக போகிறதா ? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு விஜய் அஜித் ரசிகர்கள் […]

By :  Rohini
Update: 2022-12-07 08:59 GMT

ajith

அஜித் நடிப்பில் வெளியாக உள்ள துணிவு படம் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் படத்தின் அதே ரிலீஸ் தேதியில் விஜயின் வாரிசு படமும் ரிலீஸ் ஆக உள்ளது.

ajith

இரு பெரும் நட்சத்திரங்களின் படங்கள் ஒன்றாக ஒரே தேதியில் பொங்கல் டிரீட்டாக ரசிகர்களுக்கு விருந்து படைக்க போகிறதா ? இல்ல எமனாக போகிறதா ? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு விஜய் அஜித் ரசிகர்கள் இணையத்தில் கமெண்ட்கள் மூலம் சண்டையிட்டு வருகின்றனர்.

ajith

ஆனால் அஜித் விஜய் அவர்களுக்குள் எந்த வித போட்டிகளும் இல்லை என்பதை சமீபத்தில் நடிகர் சியாம் அளித்த பேட்டியின் மூலமே அறிந்து கொள்ளலாம். நடிகர் விஜயே துணிவு பட ரிலீஸ் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்ததாகவும் அஜித்தும் நம் நண்பர் தானே என்று சொன்னதாகவும் சியாம் கூறியது அவர்களுக்குள் எந்த அளவு ஒரு நாகரீகமான நட்பு இருப்பதை தெளிவு படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : விலங்குகளை விட்டு நடிகர்களை துன்புறுத்திய இயக்குனர்கள்… கேட்டாலே நடுங்க வைக்கும் சம்பவங்கள்…

இந்த நிலையில் துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா பாடலை வருகிற 9 ஆம் தேதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ஆனால் அதற்கு முன்னதாகவே அதன் சிறிய பிட் பாடல் இன்று லீக் ஆகி ஒட்டுமொத்த துணிவு படக்குழுவையும் ஷாக் அடைய வைத்துள்ளது.

ajith

இதில் முக்கியமாக என்னவெனில் அந்த லீக் ஆன பாடலை அதிகமாக இணையத்தில் ஷேர் செய்தது விஜயின் ரசிகர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இந்தப் பாடல் வேதாளம் பட ஆலுமா டோலுமா மாதிரியே இருப்பதாகவும் கிண்டல் அடித்து வருகின்றனர். இந்த செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது.

Tags:    

Similar News