பிரியங்காவை யாரும் எதிர்க்க மாட்டாங்க ஏன் தெரியுமா? தாமரைக்கு எடுத்து சொன்ன நிரூப்!

by பிரஜன் |   ( Updated:28 Dec 2021 10:54 AM  )
thamarai
X

thamarai

தாமரை பிரியங்காவுக்கு நடந்த சண்டை குறித்து நிரூப் சொன்னது என்ன தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுக்க ப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டு எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்றவாறு மகிழ்ச்சி பொங்க ஒற்றுமையோடு இருந்தனர். இந்த வாரம் அப்படியே உல்டாவாக மாறி சண்டை போட்டு வீட்டை ரணகளமாக்கியுள்ளனர்.

இன்று கொடுக்கப்பட்ட டிக்கெட் டூ ஃபைனல் டாஸ்க்கில் முட்டை பாதுகாப்பதில் தாமரைக்கும் பிரியங்காவிற்கு அடிதடி சண்டை வந்துவிட்டது. முதலில் தாமரை பிரியங்காவை பிடித்து தள்ள பின்னர் பிரியங்கா கடும் கோபத்திற்கு உள்ளாகி அவரை தள்ளிவிட பிக்பாஸில் செம ரகளை ஆகிவிட்தாது.

இதையும் படியுங்கள்: Zoom பண்ணி பாக்கக்கூடாது…ஓப்பனாக காட்டிய பிரபல நடிகை…

இதன் ப்ரோமோக்கள் வெளியாகி நிகழ்ச்சியின் சுவாரஸ்யத்தை இன்னும் அதிகரித்தது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் நிரூப் தாமரையை சமாதானம் செய்கிறார். அப்போது, இங்க இருக்குற யாரும் பிரியங்காவை மட்டும் எதிர்க்க மாட்டாங்க ஏன் தெரியுமா? அவங்களுன்னு வெளியில் நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவரை பகைத்துக்கொண்டால் அவரது ரசிகர்கள் சம்மந்தப்பட்ட நபரை வெறுத்து கெட்டவர்களாக ஆடியன்ஸிற்கு தெரிவார்கள். அதனால் தான் பிரியங்காவை யாரும் வெறுப்பதில்லை என்றார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ...

Next Story