பாட்ஷா படத்தில் இது சரியில்லை… போல்டா சொன்ன பிரபல இயக்குனர்… ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த்!
Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே தன்னுடைய படங்களில் அப்போது ட்ரெண்ட்டில் இருக்கும் இயக்குனர்களுடன் இணைவதை பலகாலமாக வழக்கமாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவருடன் இணைந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
அப்படி ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்து வந்து கொண்டிருந்த சமயம் கே.எஸ்.ரவிக்குமார் தன்னுடைய சினிமா பயணத்தினை தொடங்கி இருக்கிறார். அவர் இயக்கிய சேரன் பாண்டியன் படத்தில் நடித்த விஜயகுமாருக்கு இவரின் இயக்கம் பிடித்து விடுகிறது.
இதையும் படிங்க:போனஸ் மேல போனஸ அள்ளி வீசும் சன்பிக்சர்ஸ்…எல்லாம் ஜெயிலர் செஞ்ச வேலைதான்…
இதை ஒருமுறை ரஜினியை பார்க்கும் போது சொல்லிவிடுகிறார். இப்படி ஒரு இயக்குனர் இருக்காரு செமையாக இயக்குறாரு என்றாராம். அதே மாதிரியே ஏவிஎம் சரவணனும் கே.எஸ்.ரவிகுமாரை புகழ்ந்து பேச ரஜினிக்கே அவரை பார்க்க ஆசை வந்து விடுகிறது.
ஒருமுறை வீரா படத்தின் ரஸ் பார்க்க ஸ்டூடியோ போன ரஜினி முன்னாடி வந்து இருக்கிறார் ரவிக்குமார். என்னப்பா உன்ன எல்லாரும் ரொம்ப புகழ்றாங்களே எனக் கேட்டு இருக்கிறார். இவரும் சிரித்துக்கொள்ள, நாம ஒரு படம் பண்ணுவோம் எனச் சொல்லிவிட்டு சென்றாராம்.
அடுத்த முறை மீண்டும் ஸ்டூடியோவில் மீட் செய்து கொள்கின்றனர். வா வந்து பாட்ஷா படம் பாரு என கையோடு அழைத்து சென்று விடுகிறார். மொத்தமாக படத்தினை பார்த்த ரவிகுமாரிடம் படம் எப்படி இருக்கு என ரஜினிகாந்த் கேட்கிறார். நல்லா இருக்கு சார் ஆனா உங்க கூட இருக்கவங்களாம் வயசாகிட்டு. நீங்க மட்டும் அப்படியே இருக்கீங்களே எனக் கேட்டாராம்.
இதையும் படிங்க: நானும் விஜயும் சண்ட போடுறது புதுசு இல்ல… அவருக்கு என்கிட்ட இது பிடிக்காது… ஓபனாக சொன்ன எஸ்.ஏ.சி
ஆச்சரியப்பட்ட ரஜினி அதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் தோன்றியதை தைரியமாக சொன்ன பாத்தியா எனப் பாராட்டி இருக்கிறார். அடுத்து ரவிகுமார் இயக்கத்தில் நாட்டாமை படத்தினை பார்த்த போது தான் இந்த இயக்குனருடன் நாம் பயணித்தே ஆகவேண்டும் என முடிவெடுத்தாராம் சூப்பர்ஸ்டார். அதன் பிறகு இந்த கூட்டணியில் உருவான படம் தான் முத்து என்பது குறிப்பிடத்தக்கது.