‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தால் என் பேரே கெட்டுப் போச்சு.. தியாகராஜன் சொன்ன பகீர் தகவல்

by Rohini |
thiyagu
X

thiyagu

Actor Thiyagarajan: தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக இயக்குனராக தயாரிப்பாளராக என பன்முகத் திறமைகள் கொண்ட நடிகராக வலம் வந்தவர் நடிகர் தியாகராஜன். அவர் முதன் முதலாக அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம்தான் முதன் முதலாக நடிகராக அறிமுகமானார். ஆனால் முதலில் அலைகள் ஓய்வதில்லை படத்தை முதலில் தயாரிக்க இருந்ததே தியாகராஜன்தானாம்.

அந்த ஒரு வாய்ப்பை தட்டிப் பறித்தவர் இளையராஜா. என் அண்ணனுக்காக இந்தப் படத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என இளையராஜா தியாகராஜாவிடம் கேட்ட போது எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் தியாகராஜன் விட்டுக் கொடுத்தாராம். அதன் பிறகு இளையராஜாவின் அண்ணன் தான் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறது. அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை படத்தில் ராதாவுக்கு அண்ணன் கேரக்டரில் நடிக்க நடிகரை தேடிக் கொண்டிருந்தாராம் பாரதிராஜா.

இதையும் படிங்க: பாக்கியாவுக்கு போட்டியாக களமிறங்கும் கோபி… இதுலையாவது ஜெயிப்பீங்களா சாரே!..

திடீரென தியாகராஜன் நியாபகத்திற்கு வந்ததும் நீயே இந்தப் படத்தில் நடி என பாரதிராஜா சொல்லியிருக்கிறார். அதற்கு தியாகராஜன் என் மனைவியிடம் கேட்க வேண்டும். அவர் நடிப்பதற்கு சம்மதம் கொடுக்க மாட்டார் என தியாகராஜன் சொல்ல பாரதிராஜாவே நேராக தியாகராஜனின் மனைவியிடம் போய் கேட்டிருக்கிறார்.

முதலில் மறுப்பு தெரிவித்த தியாகராஜன் மனைவி பின் ‘அவர் நடிப்பதால் என்னுடைய ப்ரைவேசி கெட்டு போக கூடாது. ஏனெனில் ஒரு நடிகரின் மனைவி என்ற பிம்பம் வந்த பிறகு என்னால் சுதந்திரமாக வெளியே போக முடியாது. அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்வது உங்க கடமை’ என பாரதிராஜாவிடம் தியாகராஜனின் மனைவி கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஒரு வாரத்தில் படம் ரிலீஸ்!.. இளையராஜா செய்த மேஜிக்!.. வசூலை அள்ளிய விஜயகாந்த் படம்!..

அதன் பிறகே அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் தியாகராஜன். அதன் பின் ஒரு நாள் தன் மகளை பள்ளியில் இருந்து அழைத்து வர தியாகராஜன் சென்றிருக்கிறார். அங்கு இருந்தவர்கள் தியாகராஜனை ஒரு மாதிரியாக பார்த்தார்களாம். மறு நாள் தியாகராஜனின் மனைவி தன் மகளை அழைக்க பள்ளிக்கு செல்ல நேற்று வந்தது யார் என அங்கிருந்தவர்கள் கேட்டார்களாம்.

அவர்தான் என்னுடைய கணவர் என்று சொன்னதும் ‘அந்தாளு கூட எப்படி குடும்பம் நடத்துறீங்க?’ என கேட்டார்களாம். ஏனெனில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் தியாகராஜன் ரஃபான கேரக்டரில் முரடனாக நடித்திருப்பார். இதை வைத்துதான் அனைவரும் கேட்டார்களாம். இதன் பிறகுதான் தியாகராஜன் மலையூர் மம்பட்டியான் படத்தில் ஹீரோ அவதாரம் எடுத்தாராம்.

இதையும் படிங்க: தேவி ஸ்ரீ பிரசாத்தை வாழ்த்த வந்த இளையராஜா.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Next Story