சசிகுமார் சிம்ரன் கெமிஸ்ட்ரி தூக்கல்.. வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ பட டிரெய்லர்

simran
Tourist Family: ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு சசிகுமாரின் நடிப்பில் சமீப காலமாக வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. அவருடைய நடிப்பில் அயோத்தி, நந்தன், கருடன் ஆகிய திரைப்படங்கள் வெற்றி படங்களாக மாறிய நிலையில் தற்போது அவர் நடித்துள்ள படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்த படத்தை அபிஷன் ஜீவிந்த் என்பவர் இயக்கி இருக்கிறார். குட் நைட் படத்தை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து இருக்கிறது. படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார் .இவர்களுடன் யோகி பாபு, ஜெய்சங்கர், கமலேஷ், எம்எஸ் பாஸ்கர் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் மற்றும் சிம்ரன் தன்னுடைய குடும்பத்துடன் ஏதோ ஒரு பிரச்சனையின் காரணமாக சென்னைக்கு வர அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை பற்றி விளக்கும் திரைப்படம் தான் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம். காமெடி கலந்த ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகி இருக்கிறது. ஆரம்பத்தில் பாபநாசம் படத்தின் சாயலை போல இருந்தாலும் இது முற்றிலும் வேறு ஒரு கதைக்களமாக அமைந்திருக்கிறது.

முதன் முறையாக சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் இந்த படத்தின் மூலம் இணைந்து நடித்திருக்கின்றனர் .ட்ரெய்லரில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி மக்களிடையே நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது .படம் வரும் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கின்றன .அதே தேதியில் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.