போட்றா வெடிய!.. கூலி டிரெய்லர் வீடியோ கொல மாஸ்.. சும்மா அதிருது...

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் கூலி திரைப்படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளதால் படக்குழு புரமோஷன் பணிகளை வேகப்படுத்தியிருக்கிறது. தற்போது நேரு உள்விளையாட்டு அரங்கில் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு அதிக அளவில் எதிர்ப்பார்ப்பு இருப்பதால் எப்படியும் இப்படம் 1000 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இப்படம் பல மொழிகளிலும் ரிலீஸாகவுள்ளது. ஏற்கனவே படத்தின் 3 பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த டிரெய்லர் வீடியோவில் அசத்தாலான ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. துறைமுகத்தில் கூலியாக வேலை செய்யும் ரஜினி தங்க கடிகாரம் கடத்தும் கும்பலுக்கு எதிராக களம் இறங்குவது போல் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல் ரஜினி மாஸ் காட்டுகிறார். டிரெய்லர் வீடியோவே படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது.
கூலி டிரெய்லர் வீடியோ ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது.