டீசர விட மேக்கிங் வீடியோ தெறியா இருக்கே.. மரண மாஸ் மாமே!.. வீடியோ பாருங்க!...

by Murugan |   ( Updated:2025-03-14 13:24:54  )
டீசர விட மேக்கிங் வீடியோ தெறியா இருக்கே.. மரண மாஸ் மாமே!.. வீடியோ பாருங்க!...
X

Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள திரைப்படம்தான் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படம் 80 சதவீதம் முடிந்த நிலையில் படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே சென்றதாலும், துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் கலந்து கொள்ளவிருந்ததாலும் குட் பேட் அக்லி படத்திலும் நடிக்க துவங்கினார் அஜித்.

விடாமுயற்சி படம் வெளியாகி அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஹாலிவுட் பட கதை ஸ்டைலில் இந்த படத்தை எடுத்திருந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு திருப்தி கொடுக்கும் மாஸ் ஆக்சன் காட்சிகள் இதில் இல்லை. எனவே, இப்படம் ஒரு தோல்விப்படமாகவே அமைந்துவிட்டது.

அப்போதுதான் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வீடியோ வெளியாகி அப்செட்டில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அஜித் ரசிகர்கள் என்ன எதிர்பார்ப்பார்களோ அது எல்லாமே இருக்கிறது. அது டீசர் வீடியோவிலும் காட்டப்பட்டிருந்தது.


இந்த படத்தில் அஜித் 3 கெட்டப்பில் வருகிறாரா இல்லை 3 வேடங்களா என்பது படம் பார்க்கும் போதுதான் தெரிய வரும். இந்நிலையில்தான், டீசர் எப்படி உருவானது என்கிற மேக்கிங் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படமாக்கி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் என்ன சொல்கிறாரோ அதை கச்சிதமாக செய்து காட்டுகிறார் அஜித்.

‘அவன் போட்ட ரூல்ஸை அவனோ உடைச்சிட்டு வந்திருக்கான்னா’ என டீசரின் துவக்கத்தில் வரும் வசனத்தை எப்படி பேச வேண்டும் என ஆதிக் சொல்லிக் கொடுக்கும் காட்சியோடு இந்த மேக்கிங் வீடியோ துவங்குகிறது. அஜித் ஒவ்வொரு முறையும் நடித்து காட்டிய பின் அங்கிருந்த எல்லோரும் கைத்தட்டி அவரை பாராட்டும் காட்சிகளும் இந்த மேக்கிங் வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது.

யுடியூப்பில் அதிகம் பேர் பார்த்த வீடியோ என்கிற பெருமையை குட் பேட் அக்லி டீசர் பெற்ற நிலையில், இப்போது டீசர் மேக்கிங் வீடியோவும் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் அழகாக சிரிக்கும் காட்சியில் இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருகிற 18ம் தேதி வெளியாகவுள்ளது.



Next Story