Stephen: பக்கா கிரைம் திரில்லராக மிரட்டும் ஸ்டீபன்!.. ஹைப் ஏத்தும் டிரெய்லர் வீடியோ!...
பக்கா சைக்கோ திரில்லர் படமாக வெளிவந்த ராட்சசன் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியதால் அதன்பின் பல திரைப்படங்கள் அதை பாணியில் உருவானது. அதில் போர்த்தொழில் உள்ளிட்ட சில படங்கள் கவனிக்க வைத்தது. கொரியன், ஹாலிவுட் ஆகியவற்றில் நிறைய கிரைம் திலர் படங்கள் வந்தாலும் தமிழில் மிகக் குறைவுதான்.
சமீபகாலமாகத்தான் சில அறிமுக இயக்குனர்கள் கிரைம் திரில்லர் படங்களை எடுக்க துவங்கியிருக்கிறார்கள். அதற்கென ஒரு மார்க்கெட்டும் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் கூட விஷ்ணு விஷால் நடித்த ஆர்யன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்நிலையில்தான் அறிமுக இயக்குனர் மிதுன் இயக்கத்தில் கோமதி ஷங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஸ்டீபன் என்கிற கிரைம் திரில்லர் படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் மைக்கேல் தங்கதுரை, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். ஜெயக்குமார், மோகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தின் கதை, திரைக்கதையை மிதுனும், கோமதி ஷங்கரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். இந்த படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில்தான் இந்த படத்தின் டிரைலர் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் டிரெய்லர் சிறப்பாக இருப்பதாக பதிவிட்டு வருகிறார்கள். கிரைம் திரில்லர் படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு ஸ்டீபன் படம் நல்ல அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.