வாங்கடா இன்னைக்கு முடிச்சிறேன்!.. ஆக்ஷன் தெறிக்கும் ‘வீர் தீர சூரன்’ டீசர் வீடியோ!...
சேது திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் சியான் விக்ரம். அதன்பின் தில், தூள், சாமி போன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். ஒருபக்கம், பிதாமகன், காசி போன்ற நடிப்புக்கும், கெட்டப்புக்கும் முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்தார்.
அந்நியன், ஐ என வித்தியாசமான கதைகளில் நடித்தார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் கடுமையான உழைப்பை கொடுத்தார் விக்ரம். கமலுக்கு பின் புதுப்புது கதாபாத்திரங்களில் நடிப்பதில் ஆர்வம் உடையவர் இவர். இப்போது வீர தீர சூரன் என்கிற படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை பண்ணையாரும் பத்மினியும், சிந்துபாத், சேதுபதி, சித்தா ஆகிய படங்களை இயக்கிய அருண் குமார் இயக்கியுள்ளார். சித்தா படத்தில் அண்ணன் மகளுக்கும், சித்தப்பாவுக்கும் இடையே உள்ள உறவை காட்டியிருந்தார். ஆனால், வீர தீர சூரன் படத்தில் அதிரடி ஆக்சன கதையை கையில் எடுத்திருக்கிறார்.
இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது. வித்தியாசமாக இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிடுகிறார்கள். படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை பார்க்கும்போது இது ஒரு பக்கா கேங்ஸ்டர் படமாக வீர் தீர சூரன் உருவாகியிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது.
ஒரு கோவில் திருவிழா நடக்கிறது. அங்கு வில்லன்களின் ஆட்கள் வருவது போலவும், விக்ரமை பிடிக்க எஸ்.ஜே.சூர்யா அங்கே காத்திருப்பது போலவும் காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. டீசரை பார்க்கும் போது இது ஒரு பக்கா ஆக்சன் கேங்ஸ்டர் படமாக வீர தீர சூரன் உருவாகியிருப்பது புரிகிறது.