மாரியம்மா மேரியம்மாவான கதை தெரியுமா? விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’ பட டிரெய்லர்

by Rohini |
vimal
X

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக கருதப்படுபவர் நடிகர் விமல். இவருடைய படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கவில்லை என்றாலும் பேமிலி ஆடியன்ஸை ஓரளவுக்கு கவரும் வகையில் இருந்திருக்கின்றன. அதனாலயே விமலுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். கலகலப்பு ,களவாணி போன்ற நகைச்சுவை படங்களில் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்றார் விமல் .

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு விலங்கு என்ற தொடரில் நடித்து ஒரு மாபெரும் வெற்றி நடிகராக மாறினார். அதைத் தொடர்ந்து சார் என்ற திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்தாலும் தற்போது அவர் பரமசிவன் பாத்திமா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அவருக்கு 34 ஆவது திரைப்படம்.

இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன். இவர் ஏற்கனவே தமிழ் குடிமகன் என்ற படத்தை இயக்கியவர். பரமசிவன் பாத்திமா திரைப்படத்தில் விமல் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாயாதேவி நடித்திருக்கிறார். இவர்களுடன் எம்எஸ் பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, அருள்தாஸ், கூல் சுரேஷ் என முக்கிய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர் .

இரண்டு மதங்களுக்கு இடையே நடக்கும் கலவரம் பற்றி இந்த படம் பேசப்படுகிறது. இன்று இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. சுப்பிரமணியபுரம் என்ற ஊரை மையப்படுத்தி இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே நடக்கும் பிரச்சனை தொடர்பான கதையை இந்த படம் விளக்குகிறது. ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் தான் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. படத்தின் டிரைலரை சீமான் மற்றும் அண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து வெளியிட்டு இருக்கின்றனர். அதனால் டிரைலரைப் பார்த்த பலரும் அண்ணாமலையை டேக் செய்து அவரவர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் .டிரைலரை பார்க்கும் பொழுது ரசிகர்களுக்கு ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. திரில்லர், ஆக்சன், சென்டிமென்ட் என எல்லாம் கலந்த கலவையாக இந்த படம் இருக்கிறது. அதனால் படமும் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Next Story