ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் சீரிஸ் டூ சினிமா… இத மிஸ் பண்ணிடாதீங்க!..
OTT Tamil: ஓடிடியில் இந்த வாரம் வெளியாக இருக்கும் தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கவின் மற்றும் நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி ரேஸில் வெளியானது. டிசம்பர் 31, 2024 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பிச்சைக்காரனின் வாழ்க்கை ஒரு எதிர்பாராத துரதிர்ஷ்டத்தால் தலைகீழாக மாறும்போது எதிர்பாராத திருப்பத்தை அடைவதுதான் கதை.
இதையும் படிங்க: விடாமுயற்சிக்கே விடிவுகாலம் பொறக்கல!.. அதுக்குள்ள அடுத்த படமா?!.. கொஞ்சம் யோசிச்சு முடிவெடுங்க சார்!…
சுவாரஸ்யமான திருப்பங்களுடன் ரசிகர்களை அசர வைத்த இப்படம் சுமார் வெற்றிதான். இந்நிலையில் நவம்பர் 29 முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக இருக்கிறது. இதே ரேஸில் வெளியான திரைப்படம் துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர். மீனாட்சி சவுத்ரி ஜோடியாக நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்து சூப்பர்ஹிட் வெற்றியை பெற்றது.
இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் நவம்பர் 30ந் தேதி வெளியாக இருக்கிறது. நடிகர் கிஷோர் குமார், விடிவி கணேஷ், ஷாம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் வெப் சீரிஸ் பாரசூட். அதீத கட்டுப்பாடு கொண்ட தந்தை. தங்கள் பிள்ளைகளுடன் வண்டியில் சென்ற போது நடக்கும் விபரீதம் தான் கதை.
இதையும் படிங்க: சீனர்களையும் விட்டு வைக்காத மகாராஜா!… இப்படி பண்ணிட்டீங்களேப்பா?!… வைரலாகும் வீடியோ!..