பல கோடி பட்ஜெட்!.. வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்!.. எல்லாமே இந்த வருஷம் ரிலீஸ்!

தமிழ் சினிமாவுக்கு 2024ம் வருடத்தின் முதல் பாதி சிறப்பாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிசிலும் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் இதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. வெளியான படங்களில் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் மட்டுமே 100 கோடி வசூலை தொட்டது. கவினின் ஸ்டார் படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. மற்றபடி பல படங்கள் ஓடவே […]

Update: 2024-05-29 04:29 GMT

தமிழ் சினிமாவுக்கு 2024ம் வருடத்தின் முதல் பாதி சிறப்பாக அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் ரசிகர்களை கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிசிலும் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் இதுவரை பெரிய நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

வெளியான படங்களில் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படம் மட்டுமே 100 கோடி வசூலை தொட்டது. கவினின் ஸ்டார் படம் ஓரளவுக்கு வசூலை பெற்றது. மற்றபடி பல படங்கள் ஓடவே இல்லை. கடந்த 6 மாதங்களில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் மட்டும் பல நூறு கோடிகள் இருக்கும்.

அதேநேரம், 2024ன் அடுத்த பாதி சிறப்பாக அமையும் என நம்பப்படுகிறது. அதற்கு காரணம் வரிசை கட்டி நிற்கும் 10 பெரிய படங்கள் ஆகும். தனுஷின் ராயன் திரைப்படம் ஜூன் மாதம் 13ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அடுத்து பிரபாஸ், கமல் நடித்திருக்கும் கல்கி திரைப்படம் ஜூன் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

அடுத்து பல வருடங்களாக எடுக்கப்பட்டு வரும் இந்தியன் 2 படம் ஜுலை 12ம் தேதியும், அல்லு அர்ஜூனின் புஷ்பா 2 ஆகஸ்டு 15ம் தேதியும், தெலுங்கு நடிகர் நானியின் ‘சரிப்போதா சணிவரம்’ படம் ஆக்ஸ்டு 29ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது. அடுத்து ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விஜயின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டிருக்கிறது.

லியோ படத்திற்கு பின் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் இது. விஜய் 3 வேடங்கள் எனவும் ஒரு செய்தி உண்டு. அதே செப்டம்பர் 27 பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓஜி திரைப்படமும் வெளியாகவுள்ளது. அடுத்து அக்டோபர் மாதம் ரஜினியின் வேட்டையன் படம் வெளியாகவிருக்கிறது.

அதே அக்டோபர் மாதம் 10ம் தேதி ஜுனியர் என்.டி.ஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவாரா படமும் வெளியாகவுள்ளது. அடுத்துள்ள நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கமலின் இந்தியன் 2, அஜித்தின் விடாமுயற்சி மற்றும் சூர்யாவின் கங்குவா படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சில தெலுங்கு படங்கள் இருந்தாலும் அவை தமிழ் மொழியிலும் ரிலீஸ் ஆகும் பேன் இண்டியா படங்களாகும். எனவே, மீதமுள்ள 6 மாதங்கள் தமிழ் சினிமாவில் பல படங்கள் ஹிட் அடிக்கும் என நம்பப்படுகிறது.

Tags:    

Similar News