அவன ஒன்னுமே பண்ண முடியாதுய்யா!.. இளையராஜா பாட்டை கேட்டு எமோஷனால் ஆன வைரமுத்து!...

by சிவா |
vairamuthu
X

பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜா இசையமைத்த நிழல்கள் படம் மூலம் பாட்டு எழுத வந்தவர்தான் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் படத்தில் இடம் பெற்ற பொன்மாலைப் பொழுது பாடலை எழுதினார். இந்த பாடல் வரிகளே இளையராஜாவுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அதன்பின் தொடர்ந்து இளையராஜா இசையமைத்த பல படங்களிலும் வைரமுத்து பாட்டு எழுதினார். காதல் ஓவியம், கடலோர கவிதைகள், மண் வாசனை, முதல் மாரியாதை ஆகியவை இதில் முக்கிய படங்களாகும். இந்த எல்லா படங்களிலும் இளையராஜாவின் இசையில் வைரமுத்து அற்புதமான வரிகளை எழுதியிருந்தார்.

ilayaraja

ஆனால், பாடல் வரிகளை மாற்றுவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். வைரமுத்து பாடல்களை எழுதினால் நான் இசையமைக்க மாட்டேன் என இளையராஜா போர்க்கொடி தூக்கினார். எனவே, கடந்த 30 வருடங்களுக்கும் மேல் இருவரும் இணைந்து பணியாற்றவே இல்லை.

சில மேடைகளில் வைரமுத்துவை மறைமுகமாக தாக்கி இளையராஜா பேசுவதும், ராஜாவை தாக்கி வைரமுத்து பேசுவதும் என தொடர்ந்து சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், வைரமுத்துவிடம் சில நாட்கள் பணிபுரிந்தவரும், மறைந்த நடிகருமான மாரிமுத்து ஊடகம் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

‘இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள்’ என்கிற புத்தகைத்தை வைரமுத்து எழுதும்போது நான் அருகில் இருந்தேன். அதில், இளையராஜாவை தவிர்த்துவிட்ட எழுத வைரமுத்து யோசித்தார். அதேநேரம், அவரைப்பற்றி பாராட்டி எழுதினால் ஐஸ் வைப்பதற்காக வைரமுத்து எழுதி இருக்கிறார் எனவும் பேசுவார்கள் என தயங்கினார். ஒருநாள் இளையராஜாவை எழுதுவது என முடிவு செய்தார்.

marimuthu

அப்போது தூரத்தில் இளையராஜாவின் ‘நான் உள்ளுக்குள்ள சக்ரவர்த்தி ஆனா உண்மையில மெழுகுவர்த்தி’ பாடல் தூரத்தில் ஒலித்தது. உடனே கையில் வைத்திருந்த தூக்கி எறிந்த வைரமுத்து ‘அவன ஒன்னுமே பண்ண முடியாதுய்யா. என் தமிழுக்கு தீனி போட்டவன் அவன்தான். மெட்டுக்களை அவ்வளவு அழகாக கொடுப்பான்.

இளையராஜாவுடன் பாட்டு எழுதிய திருப்தி எனக்கு வேறு யாரிடமும் ஏற்படவில்லை. மெட்டுக்களே குழப்பமாக இருக்கிறது. இளையராஜா போடும் மெட்டுக்கள் எனக்குள் இருந்து வரிகளை தோண்டி எடுக்கும். எனக்குள் இருக்கும் தமிழை ராஜாவின் இசை தட்டி எழுப்பும். எனக்கு சரியான எதிரி இளையராஜா மட்டுமே’ என என்னிடம் அவர் சொன்னார்’ என மாரிமுத்து சொல்லி இருந்தார்.

Next Story