எத்தனை வருஷம் ஆச்சு இப்படிப்பார்த்து!.. கேடி பில்லாவும் கில்லாடி ரங்காவும்!.. கலக்குறாங்களே!..
சிவகார்த்திகேயன் சினிமாவில் 3, மெரினா, மனங்கொத்தி பறவை என வளர்ந்து வரும் நேரத்தில் களவாணி, கலகலப்பு என கலக்கிய விமல் உடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் 2013ம் ஆண்டு நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என எங்கேயோ போய் விட்டார். ஆனால், நடிகர் விமல் பெரிதாக ஹிட் படங்களை கொடுக்க முடியாமல் ஆள் அட்ரஸே காணாமல் போய் விட்டார்.
இதையும் படிங்க: அந்த நடிகருடன் படு கிளாமராக நடித்த ஜெயலலிதா!.. தியேட்டரில் அலைமோதிய கூட்டம்!..
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமல் மற்றும் சிவகார்த்திகேயனின் நட்பும் நா. முத்துகுமார் வரிகளில் இடம்பெற்ற “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்” பாடலும் இன்னமும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும்.
பல வருடங்கள் கழித்து சிவகார்த்திகேயன், விமல் சந்திப்பு நடைபெற்றுள்ளது. மேலும், சூரி, சதீஷ் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் உடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் நடிகர் விமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இதையும் படிங்க: சிவாஜி கணேசனை இயக்க 19 வருடங்கள் காத்திருந்த பாலச்சந்தர்!. அட அந்த படமா!..
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தில் விமலும் இணைந்துள்ளாரா என்றே ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மீண்டும் இந்த காம்போ இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன.
பல வருடங்கள் கழித்து விமல் நடித்த விலங்கு வெப்சீரிஸ் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. இந்நிலையில், கூடிய சீக்கிரமே வெயிட்டான கம்பேக்கை விமல் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.