இப்பவே இத்தனை கோடி லாபம்...இன்னும் பல கோடி இருக்கே!.. சூடு பிடிக்கும் விஜய் 66 வியாபாரம்....
பீஸ்ட் படத்தை முடித்துள்ள நடிகர் விஜய் அடுத்து ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளதும், இப்படத்தை தோழா படத்தை இயக்கிய வம்சி இயக்கவுள்ளதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்படத்தை தெலுங்கில் பிரம்மாண்ட படங்களை தயாரிக்கும் தில் ராஜு தயாரிக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ் என 2 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு அனேகமாக மார்ச் மாதம் துவங்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்தில் நடிக்கும் நடிகையை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்படம் விஜயின் 66வது திரைப்படமாகும்.
படப்பிடிப்பே துவங்காத நிலையில், இப்படம் ரூ.200 கோடிக்கு ஆஃபர் வந்துள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆனால், அதுதான் உண்மை. இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ஜீ தொலைக்காட்சி நிறுவனம் 200 கோடிக்கு கேட்டுள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட்டே ரூ.200 கோடிதான் எனக்கூறப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு துவங்கும் முன்பே அந்த பணம் தயாரிப்பாளருக்கு உறுதியாகியுள்ளது.
அடுத்து தியேட்டரில் வசூலாகும் தொகை, ஓவர்சீஸ், ஹிந்தி டப்பிங் உரிமை என பல வியாபாரங்களை கணக்கிட்டால் தயாரிப்பாளருக்கு இன்னும் பல கோடிகள் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.