மகனுக்காக பல ஹீரோக்களின் வாழ்க்கையில் விளையாடிய எஸ்.ஏ.சி… அம்புட்டு பாசமோ!

Vijay: விஜய் இன்றைய கோலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரை இந்த நிலைமைக்கு வளர்த்துவிட்ட பெருமை அதிகமாக அவர் தந்தையை எஸ்.ஏ.சந்திரசேகரை தான் சேரும். பிரபல இயக்குனரின் மகனாக தான் விஜய் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார்.  கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர். பிஸியாக ஷூட்டிங் சென்று கொண்டிருந்தவர். திடீரென நடிக்க வேண்டும் என தன் ஒரே மகன் சொன்னதை முதலில் ஏற்க மறுக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்த விஜய் அண்ணாமலை படக்காட்சியை நடித்து காட்டுகிறார். இதையும் […]

By :  Akhilan
Update: 2023-09-15 23:53 GMT

Vijay: விஜய் இன்றைய கோலிவுட்டில் மிகப்பெரிய ஹீரோவாக இருந்தாலும் அவரை இந்த நிலைமைக்கு வளர்த்துவிட்ட பெருமை அதிகமாக அவர் தந்தையை எஸ்.ஏ.சந்திரசேகரை தான் சேரும். பிரபல இயக்குனரின் மகனாக தான் விஜய் கோலிவுட்டிற்கு எண்ட்ரி கொடுத்தார்.

கோலிவுட்டில் பிரபல இயக்குனராக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர். பிஸியாக ஷூட்டிங் சென்று கொண்டிருந்தவர். திடீரென நடிக்க வேண்டும் என தன் ஒரே மகன் சொன்னதை முதலில் ஏற்க மறுக்கிறார். ஆனால் பிடிவாதமாக இருந்த விஜய் அண்ணாமலை படக்காட்சியை நடித்து காட்டுகிறார்.

இதையும் படிங்க: ஒரே வருஷத்துல 3000 கோடியா!.. பலே ஆளா இருக்காரே இந்த பாலிவுட் பாட்ஷா.. அடுத்த சம்பவம் லோடிங்!..

பின்னர் தன் மனைவியும் காட்டாயத்தின் பேரில் விஜயை நடிக்க வைக்க ஒத்துக்கொள்கிறார். முதல் படத்திற்கு பிரபல இயக்குனரின் மகன் என்ற வரவேற்பு இருக்கிறது. அவருடன் பிரபல நடிகர் விஜயகாந்த் நடிக்கிறார். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.

கிட்டத்தட்ட விஜயை பத்திரிக்கைகள் கீழ்த்தரமாக விமர்சித்து செய்தி வெளியிட்டனர். இதை படித்த விஜய் மிகவும் மன வேதனையடைந்து இருக்கிறார். ஆனால் அதையே தன்னுடைய உத்வேகமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து நடிக்கிறார்.

இதையும் படிங்க: 6 ஃபிளாப்புக்கு பிறகு விஷாலுக்கு வெற்றி கிடைத்ததா?.. மார்க் ஆண்டனி முதல் நாள் வசூல் எவ்வளவு?

விஜயின் வளர்ச்சிக்கு அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பெரிய அளவில் துணை நின்று இருக்கிறார். அவரின் இயக்கத்திலேயே 7 படங்களை தொடர்ந்து இயக்கி இருக்கிறார். ஆனாலும் படத்தினை விநியோகிஸ்தர்கள் வாங்க வரவில்லை. தொடர்ச்சியாக அவர்களை நேரில் சந்தித்து விஜயே போட்டுக்காட்டி படத்தினை ஓட வைத்தார்.

அதே நேரத்தில், விஜயிற்கு போட்டியாக இருந்த நடிகர்களை எஸ்.ஏ.சி படம் எடுத்தே கேரியரை காலி செய்தார் என்றும் கூறப்படுகிறது. இதனால் விஜயால் எளிதாக கோலிவுட்டில் வளர முடியும் என்ற ஐடியாவில் தான் சந்திரசேகர் இதை செய்ததாக கோலிவுட் வட்டாரத்தில் ஏற்கனவே ஒரு கிசுகிசுக்கள் கிளம்பியதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News