விஜய்க்கு வேற வழியே இல்லை!.. தலைவரை ஊறுகாய் போல தொட்டுக்கத்தான் போறாரு!.. கலெக்‌ஷன் முக்கியம் பிகிலு!..

by Saranya M |   ( Updated:2023-09-09 08:46:51  )
விஜய்க்கு வேற வழியே இல்லை!.. தலைவரை ஊறுகாய் போல தொட்டுக்கத்தான் போறாரு!.. கலெக்‌ஷன் முக்கியம் பிகிலு!..
X

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் எப்படி நடிகர் ரஜினிகாந்த் விஜய்யை வெயிட்டாவும் அஜித்தை லைட்டாவும் தொட்டுக் கொண்டு ஜெயிலர் படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினாரோ அதே போல காக்கா - கழுகு கதைக்கு பதிலடி கொடுத்து தலைவரை ஊறுகாய் போல லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தொட்டுக் கொள்வார் என பிரபலம் ஒருவர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ் போட்டி நடிகர்கள் மத்தியில் உருவான நிலையில், முதல் மரியாதை, கடைசி மரியாதை எல்லாம் பார்க்கவே மாட்டார்கள் என்றும் பிசினஸுக்கு ரசிகர்களை எப்படி ட்ரிக்கர் செய்து கல்லா கட்டுவது என்பதை மட்டுமே பார்ப்பார்கள், நடிகர் விஜய்யும் தற்போது அதற்கு பக்காவான பிளாட்ஃபார்மை போட்டு விட்டாராம்.

இதையும் படிங்க: விஜய் படத்தில் இருந்தே ஆட்டைய போட்ட வெங்கட்பிரபு? காப்பி அடிக்கிறது ஓகே… அதுக்குனு ப்ளாப் படத்தையா?

ஜெயிலர், ஜவான் என சினிமா ரசிகர்கள் மற்ற படங்களை கொண்டாடி வரும் நிலையில், லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு சுக்குநூறாக உடைந்து விட்டது.

மேலும், வெங்கட் பிரபு ஒரு பக்கம் லியோ ரிலீசுக்கு முன்பாகவே வரும் அக்டோபர் 1ம் தேதியே தளபதி 68 படத்திற்கு பூஜை போட உள்ள நிலையில், சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்கிற பில்டப்புகளால் விஜய் ரசிகர்களே லியோ படத்தை மறந்து விட்டு தளபதி 68 படத்தின் மீது எதிர்பார்ப்புகளை வைக்கத் தொடங்கி விட்டனர்.

இதையும் படிங்க: நூடுல்ஸ்க்கு பதிலாக இத்துப்போன இடியாப்பம்னு வச்சிருக்கலாம்!.. இப்படியா இம்சை பண்ணுவீங்க பாஸ்!..

இந்நிலையில், லியோ பக்கம் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் திருப்பி முதல் நாளே பெரிய வசூல் வேட்டையை நடத்த வேண்டும் என்றால் ஆடியோ லாஞ்ச் ஒன்று மட்டுமே ஒரே வழி என்றும் அதை விஜய் கச்சிதமாக ரஜினி பேசியதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிலடி கொடுத்து ஹைப்பே ஏற்றுவது நிச்சயம் என வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

Next Story