அந்த படத்திலேயே பல கோடி காலி!.. விஜயை வைத்து ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பாளர்....

ரஜினி, விஜய், அஜித் போல முன்னணி நடிகர்கள் என்றாலும் அப்படத்தை வெற்றி பெற செய்வது இயக்குனரின் கையில்தான் இருக்கிறது. அதேபோல், படம் பல கோடிகளை வசூல் செய்தாலும் படத்தின் பட்ஜெட்டை தாண்டி அப்படம் வசூல் செய்தால் மட்டுமே அது தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும். அட்லி போன்ற இயக்குனர்கள் மெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதால் அவரின் படங்கள் வசூல் செய்தாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என்பதே நிஜம் என திரையுலகில் கூறி வருகின்றனர். விஜயை வைத்து அவர் இயக்கிய […]

Update: 2021-12-16 03:40 GMT

ரஜினி, விஜய், அஜித் போல முன்னணி நடிகர்கள் என்றாலும் அப்படத்தை வெற்றி பெற செய்வது இயக்குனரின் கையில்தான் இருக்கிறது. அதேபோல், படம் பல கோடிகளை வசூல் செய்தாலும் படத்தின் பட்ஜெட்டை தாண்டி அப்படம் வசூல் செய்தால் மட்டுமே அது தயாரிப்பாளருக்கு லாபமாக அமையும்.

அட்லி போன்ற இயக்குனர்கள் மெகா பட்ஜெட்டில் படம் எடுப்பதால் அவரின் படங்கள் வசூல் செய்தாலும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதில்லை என்பதே நிஜம் என திரையுலகில் கூறி வருகின்றனர். விஜயை வைத்து அவர் இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் வெற்றி என்றாலும் கூறிய பட்ஜெட்டை விட அதிக செலவு வைத்து தேனாண்டாள் பிலிம்ஸை காலி செய்தார் அட்லீ.

ஆனாலும், விஜயின் சிபாரிசில் அவருக்கு தொடர்ந்து படங்கள் கிடைத்தன. அப்படி அவர் இயக்கிய திரைப்படம்தான் பிகில். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெற்றி என்றாலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய லாபம் கிடைக்கவில்லை. எனவே, விஜயிடம் தங்களுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்குமாறு கேட்டது. ஆனால், தொடர்ந்து படங்கள் கையில் இருப்பதால் காத்திருக்க சொன்னார் விஜய். தற்போது ஒருவழியாக விஜய் மனம் இறங்கி வந்துள்ளார்.

atlee

பீஸ்ட் படத்தை முடித்துள்ள விஜய் அடுத்து தெலுங்கு பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அதன்பின், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். எனவே, அந்த 2 படங்களுக்கு பின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை அட்லீ இயக்குவரா இல்லை வேறு இயக்குனரா என்பது அப்போது தெரியவரும்.

அதேபோல், தெறி படத்தில் நஷ்டமடைந்த தேனாண்டாள் பிலிம்ஸும் விஜயிடம் கால்ஷூட் கேட்டு வருகிறது. விஜய் எப்போது மனம் இறங்குவார் என தெரியவில்லை.

Tags:    

Similar News