ஜெய்பீம் படத்துக்கு நோ தேசிய விருது!.. நடிப்பின் நாயகனை வச்சு செய்யும் விஜய் ஃபேன்ஸ்!..

by Saranya M |   ( Updated:2023-08-25 02:58:14  )
ஜெய்பீம் படத்துக்கு நோ தேசிய விருது!.. நடிப்பின் நாயகனை வச்சு செய்யும் விஜய் ஃபேன்ஸ்!..
X

சூர்யா தயாரித்து நடித்த சூரரைப் போற்று படத்துக்கு 5 தேசிய விருதுகள் கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. சுதா கொங்கரா இயக்கி அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியான சூரரைப் போற்று படத்துக்கு சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த படம், சிறந்த இசை என பல பிரிவுகளில் தேசிய விருதுகள் குவிந்த நிலையில், இந்த ஆண்டு ஜெய்பீம் படத்துக்கும் தேசிய விருதுகள் குவியும் என சூர்யா ரசிகர்கள் ஓவர் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர்.

ஆனால், 69வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சூர்யா நடித்த ஜெய்பீம் படத்துக்கு ஒரு தேசிய விருது கூட அறிவிக்கப்படாமல் தமிழில் வெளியான கடைசி விவசாயி படத்துக்கு மட்டுமே சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் மறைந்த நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஐயா உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லியா!.. அல்லு அர்ஜுனையும் விடாது வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறன்!..

ஜெய்பீமுக்கு ஒரு விருதும் இல்லை:

ஜெய்பீம் படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் உள்ளிட்டோருக்காவது தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் சினிமாவையே டோட்டலாக இந்த ஆண்டு தேசிய விருதுகள் குழு புறக்கணித்து விட்டது போலத்தான் தெரிகிறது.

சூரரைப் போற்று படத்துக்கு 5 விருதுகள் கிடைத்த போதே, நடிகர் சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை தேசிய விருதுகள் வழங்கும் ஆணையத்தில் இருந்ததால் தான் சூர்யா படத்துக்கு விருதுகள் கிடைத்ததாக சர்ச்சைகள் வெடித்தன.

இதையும் படிங்க: 69வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு!.. சிறந்த பட விருதை தட்டி சென்ற விஜய் சேதுபதி படம்..

தங்கதுரை இல்லையா?

இந்நிலையில், இந்த ஆண்டு தங்கதுரை இல்லையா? ஒரு அவார்டு கூட நடிப்பின் நாயகனுக்கு கிடைக்கலையே என விஜய் ரசிகர்கள் சூர்யா ரசிகர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். மேலும், அடுத்த வருஷம் கண்டிப்பாக எதற்கும் துணிந்தவன் படத்துக்கு நிச்சயம் விருது கிடைக்கும் என்றும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

இதனால், கடுப்பான சூர்யா ரசிகர்கள் சூர்யாவை போல விமானத்தை ஓட்டணும்னு நினைச்சித்தானே உங்காளு பீஸ்ட் படத்தில் நடித்து உலகளவில் ட்ரோல் செய்யப்பட்டாரு, அவரால ஒரு தேசிய விருதாவது வாங்க முடியுதான்னு பாருங்க என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Next Story