அவங்க ஏன் அங்க இருக்காங்க? போக சொல்லு… உதவியாளரை கடிந்துக்கொண்ட நடிகர் விஜய்…

by Akhilan |   ( Updated:2024-03-17 08:26:44  )
அவங்க ஏன் அங்க இருக்காங்க? போக சொல்லு… உதவியாளரை கடிந்துக்கொண்ட நடிகர் விஜய்…
X

Vijay: நடிகர் விஜய் பொதுவாகவே தன்னுடைய சக நடிகர்களிடம் ஷூட்டிங்கில் அரட்டை அடிக்கும் பழக்கமே இல்லாதவர். ஆனால் யாருக்கு என்ன வேண்டும் என்பதை யோசித்து அதை அழகாக செய்து கொடுத்து விடுவார். அப்படி ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்த ஒரு விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சாந்தி வில்லியம்ஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்து சித்ரா லட்சுமணனுடன் தொடர்ச்சியாக பேசி வருகிறார். அந்த பேட்டியில் இருந்து, வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை தாண்டிய சாந்தி வில்லியம்ஸ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். அவரின் ஆரம்பகால வாழ்க்கை அத்தனை கஷ்டங்களை தாண்டி வந்தது.

இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?

கணவர் இறந்த பின்னர் சினிமாவிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். அப்படி திருமலை படத்துக்காக அவரை கே.பாலசந்தர் கால் செய்து அழைத்தாராம். அப்போது அவர் திருவனந்தபுரத்தில் இருந்தாராம். 10 ஆயிரத்துக்கு ப்ளைட் டிக்கெட் விற்பனையாக அவசர அவசரமாக எடுத்து சென்னை வந்து இறங்கி இருக்கிறார். விமானநிலையத்தில் கார் இருந்ததாம். உடனே ஏறி ஷூட்டிங் வந்துவிட்டாராம்.

சாந்தி வில்லியம்ஸ் கூறுகையில், அங்கிருந்த சேரில் உட்கார்ந்து இருந்தேன். கொசுக்கடியில் உட்கார்ந்து இருந்த என்னை பார்த்த விஜய் அம்மா ஏன் உட்கார்ந்து இருக்காங்க? உள்ளே போய் உட்கார சொல் என்றார். உதவியாளர் வந்து என்னை போய் உள்ளே விஜயின் மேக்கப் ரூமில் உட்கார சொன்னார்.

இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு செக் கொடுத்த கமல்!.. ஆடிப்போன தயாரிப்பாளர்!.. ஆளவந்தானில் நடந்த அக்கப்போறு..

நான் வேண்டாம். அவர் வந்தால் ரெஸ்ட் எடுப்பாரே என தவிர்த்துவிட்டேன். இருந்தும், களைப்பு தாங்காமல் அருகில் இருந்த பெஞ்சில் படுத்துவிட்டேன். அப்போ, ஷூட்டிங் முடிந்து வந்த விஜய் அதை பார்த்துவிட்டார். உடனே உதவியாளரை அழைத்தவர். அம்மா ஏன் அங்கே படுத்து இருக்காங்க?

நான் இப்போ போனால் காலையில் தான் வருவேன் எனக் கூறிவிட்டு சென்றார். அதனால் உதவியாளர் என்னை எழுப்பினார். நானும் உள்ளே படுத்துவிட்டேன். பின்னர் விஜய் வந்ததும் நான் காலை 4 மணிக்கு எழுந்து வர என்னுடைய காட்சிகளை முடித்துவிட்டு அடுத்த விமானத்தில் ஊருக்கு வந்துவிட்டேன். அதற்கு பாலசந்தர் எனக்கு கால் செய்து நன்றி சொன்னார். அவரின் நிறுவனத்தில் நான் 24 புராஜக்ட் செய்து இருக்கேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story